திண்டுக்கல் : அரசு பேருந்து ஓட்டுனருக்கு திடீர் நெஞ்சுவலி - நொடியில் உயிர் பிழைத்த பயணிகள்.! - Seithipunal
Seithipunal


திண்டுக்கல் மாவட்டம் பேருந்து நிலையத்தில் இருந்து காரைக்குடிக்கு 52 பயணிகளுடன் அரசு பேருந்து ஒன்று புறப்பட்டுச் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்தை மதுரை மாவட்டத்தில் உள்ள கடச்சநேந்தலை பகுதியைச் சேர்ந்த கிருபாகரன் ஒட்டி வந்தார்.

இதையடுத்து இந்த பேருந்து உலுப்பகுடி பேருந்து நிலையம் அருகே வந்துகொண்டிருந்த போது ஓட்டுனருக்கு திடீரென நெஞ்சி வலி ஏற்பட்டுள்ளது. இதை அறிந்த ஓட்டுநர் கிருபாகரன் பேருந்தை சாலையோரமாக நிறுத்தியுள்ளார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. 

இதைத் தொடர்ந்து பேருந்தில் பயணம் செய்த பயணிகளும், நடத்துனரும் அவரை அமைதிப்படுத்தி அருகே இருந்த உலுப்பக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

அதன் பின்னர் சம்பவம் தொடர்பாக ஓட்டுனரின் உறவினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, உறவினர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஓட்டுனரை மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near dindukal govt bus driver suddenly stop bus for heart attack


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->