பட்டப்பகலில் வீடு புகுந்து சரமாரியாக தாக்கிய கனிம வள கொள்ளை கும்பல்.!! 3 பேர் படுகாயம்.!  - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டத்தில் உள்ள திட்டக்குடி அருகே ஏ. மருர் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் தொடர்ச்சியாக கனிம வள கொள்ளை மற்றும் டிராக்டரில் கிராவல் எடுத்துச் சொல்வதாக கிராம நிர்வாக அலுவலர் போலீசில் புகார் அளித்துள்ளார். 

இவருக்கு கிராவல் கொள்ளை பற்றி ஏ. மருர் கிராமத்தின் ஊராட்சி மன்ற துணைத் தலைவரின் கணவர் சேகர் தகவல் தெரிவித்ததாக, கிராவலை கொள்ளையடிக்கும் கும்பலுக்கும் சேகருக்கும் முன் விரோதம் இருந்து வந்தது. 

இந்நிலையில் கிராம நிர்வாக அலுவலர் சிறுப்பாக்கம் காவல் நிலையத்திலும் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்திலும் கனிம வள கொள்ளை நடப்பதாக ஒரு வாரத்திற்கு முன்பு எழுத்துப்பூர்வமாக புகார் அளித்துள்ளார்.

இந்த புகாரை பெற்றுக் கொண்டு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திய கனிம வள கொள்ளையில் ஈடுபடும் கும்பல் கிராம நிர்வாக அலுவலர் புகார் கொடுப்பதற்கு சேகர் தான் காரணம் என்றுக் கருதி, சேகரின் வீட்டிற்குள் புகுந்து அவரை  சரமாரியாக தாக்கியுள்ளனர்.

 இந்த தாக்குதலில் சேகர் மற்றும் அவரது உறவினர்கள் என்று மொத்தம் மூன்று பேர் பலத்த காயமடைந்தனர். இதைப்பார்த்த அருகிலிருந்தவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near cuddalore three peoples admitteds hospital for sand Robbery Gang attack


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->