கோயம்புத்தூர் : சப் இன்ஸ்பெக்டர் பதவியில் இருந்து ஏட்டாக பதவி இறக்கம் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள கோமங்கலம் காவல் நிலையத்தில் மணி மாறன் என்பவர் துணை தலைமை காவலராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நேரத்தில் ஒட்டன்சந்திரம் பகுதியில் விபத்து ஒன்று நடந்துள்ளது. இதில் தொடர்புடைய வாகனத்திற்கு இன்சூரன்ஸ் இல்லாமல் இருந்தது. 

இதை அறிந்த துணை தலைமை காவலர் மணி மாறன் போலியாக இன்சூரன்ஸ் தயாரித்துள்ளார். அதன் பின்னர் அவர் இந்த விபத்து கோமங்கலம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்ததாக வழக்கு பதிவு செய்துள்ளார். இதன் மூலம் துணை தலைமை காவலர் மணிமாறன் செய்த மோசடி அம்பலமாகி உள்ளது. 

இதுமட்டுமல்லாமல். மணிமாறன் நில ஆவணங்களைக் காணவில்லை என்ற சான்றிதழ்களை வழங்கியதாகவும், காவல் ஆவணங்களில் தலைமை காவலரின் கையொப்பத்தை அவரே போட்டுக்கொண்டதும் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில், இந்த மோசடிகள் குறித்து உயர் அதிகாரிகள் மணிமாறனிடம் விசாரணை நடத்தினார்கள். அதில், மணி மாறனே ஆவணங்களை போலியாக தயாரித்தது, திருத்துவது மற்றும் மோசடியில் ஈடுபட்டது உள்ளிட்ட ஒன்பது குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து உயர் அதிகாரிகள் மணிமாறனை துணை தலைமை காவலர் பதவியில் இருந்து ஏட்டாக பதவி இறக்கம் செய்து, அதற்கான உத்தரவையும் வெளியிட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near coimbatore police sub inspector demotion for make fake documents


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->