சிதம்பரம் : முதலைக்கு இறையாகிய ஐஐடி மாணவன்.!   - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே வேளக்குடி கிராமத்தைச் சேர்ந்த திருமலை. இவர் சிதம்பரத்தில் உள்ள அரசு ஐடிஐயில் படித்து வருகிறார்.  இவர் இன்று மாலை அவரது நண்பரான அதே ஊரைச் சேர்ந்த விஷ்ணு மற்றும் பழனியுடன் சேர்ந்து பழைய கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார்.

அப்போது ஆற்றுத் தண்ணீரில் ஏதோ சத்தம் கேட்டுள்ளது.  இதைக்கேட்ட அனைவரும் விறுவிறு என்று கரைக்கு வந்துள்ளனர். ஆனால், எதிர்பாராத விதமாக  இவர்கள் பயன்படுத்திய சோப்பு ஆற்றின் கரையோரத்தில் விழுந்துள்ளது. 

அதனை எடுக்க முயன்ற திருமலையின் காலை பிடித்து இழுத்துச் சென்றுள்ளது. இதைப்பார்த்த அவருடைய நண்பர்கள் கூச்சலிட்டதால், இதைக்கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து முதலையைச் சத்தமிட்டு விரட்ட முயன்றுள்ளனர். ஆனால், முதலை திருமலையை ஆற்றுக்குள் இழுத்துச் சென்றது.  

இதுகுறித்து தீயணைப்புத் துறையினர், வனத்துறையினர் மற்றும் காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மீட்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். 

சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேல் தேடிய நிலையில் திருமலையின் உடல் ஒரு புதரில் கிடந்தது. அதன் பின்னர் அவரின் உடலை மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். 

இதுகுறித்து தகவலறிந்த சிதம்பரம் உதவி ஆட்சியர் சுவேதா சுமன், சிதம்பரம் காவல் உதவி கண்காணிப்பாளர் ரகுபதி மற்றும் வட்டாட்சியர் ஹரிதாஸ் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

இந்தப் பகுதியில் தொடர்ந்து, பல உயிர்கள் பலிகள் மற்றும் கை, கால்களை இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தவாறே உள்ளது என்றும், இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கையாக உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chithambaram iit student died


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->