தாம்பரம் || அறையில் பதுக்கி வைத்து கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னை தாம்பரம் அருகே தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட இடங்களில் கஞ்சா விற்பனையை முழுவதும் ஒழிப்பதற்காக போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவுப்படி மதுவிலக்கு உதவி கமிஷனர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீஸ் தலைமை காவலர்கள் ரவிக்குமார், சரவணன் உள்ளிட்டோர் தலைமையில் மூன்று தனிப்படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

இதன் காரணமாக, அவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

இந்நிலையில் தலைமை காவலர் சரவணன் மற்றும் துணை தலைமை காவலர் தினேஷ் உள்ளிட்டோர் தலைமையிலான தனிப்படை போலீசார் பல்லாவரம் ரேடியல் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, கட்டபொம்மன் நகர், கணேஷ் அவன்யூவில் சந்தேகத்துக்கிடமாக நின்ற இரண்டு வாலிபர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். 

அதன் பின்னர், போலீசார் அவர்களிடம் சோதனை மேற்கொண்ட போது கஞ்சா பொட்டலங்கள் இருந்தது. மேலும், அவர்களிடம் விசாரணை செய்ததில், அவர்கள் இருவரும் விருதுநகரை சேர்த்த பிரகாஷ் மற்றும் விருத்தாசலத்தை சேர்ந்த நசீர்பாஷா என்பது தெரிய வந்தது. இவர்கள் இருவரும் கல்லூரி மாணவர்கள். இதில், பிரகாஷ் பல்லாவரத்தில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் நான்காம் ஆண்டு சட்டப்படிப்பு படித்து வருவதும் நசீர்பாஷா பல்லாவரத்தில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படிப்பதும் தெரியவந்தது. 

இவர்கள் இருவரும் தாங்கள் தங்கி இருக்கும் அறையில் கஞ்சா பதுக்கி வைத்து அதனை கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அதன் பின்னர் இருவரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து பத்து கஞ்சா பொட்டலங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், மாணவர்கள் தங்கி இருந்த அறையை போலீசார் சோதனை செய்த போது அங்கு சுமார் 12 கிலோ கஞ்சா சிக்கியது. 

இதைத்தொடர்ந்து, போலீசார் இரண்டு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இதுவரை, தாம்பரம் மாநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 11 மாதங்களில் கஞ்சா விற்பனை தொடர்பாக சுமார் 241 பேர் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும். 

இதேபோல் குண்டர் சட்டத்தில் 25 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும், கஞ்சா விற்பனையில் ஈடுபடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் எச்சரிக்ககை விடுத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

near chennai college students arrested for drugs sale


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->