கடல் சீற்றத்தால் கவிழ்ந்த படகு.! மாயமான மீனவர் உடல் மீட்பு.! - Seithipunal
Seithipunal


மயிலாடுதுறை மாவட்டத்தில் கடல் சீற்றத்தால் படகு கவிழ்ந்ததில் மாயமான மீனவரின் உடல் மீட்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் கொட்டயமேடு பகுதியை சேர்ந்தவர் மீனவர் பெருமாள்(43). இவர் அதே பகுதியை சேர்ந்த நடராஜன், சூரியமூர்த்தி ஆகியோருடன் கடந்த 27ஆம் தேதி காலை படகில் மீன் பிடிக்க சென்றார். இந்நிலையில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது திடீரென கடல் சீற்றத்தால், சில அடி தூரம் எழுந்த ராட்சத அலையால் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில் நடராஜன் மற்றும் சூரியமூர்த்தி கடலில் தத்தளித்த நிலையில், அப்பொழுது அங்கு மற்றொரு படகில் வந்த மீனவர்கள் இரண்டு பேரையும் மீட்டனர். ஆனால் பெருமாள் கடலில் மூழ்கி மாயமானார். இதையடுத்து நடராஜன் மற்றும் சூரிய மூர்த்தியை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதைத்தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கடலோர காவல் படையினர் மீனவர்கள் உதவியுடன் கடலில் மாயமான பெருமாளை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் இன்று கொட்டாயமேடு கடற்கரையில் பெருமாளின் உடல் கரை ஒதுங்கி இருந்தது.

இதைப் பார்த்த மீனவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mysterious fisherman body recovery


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->