டாஸ்மாக் வசூலை அதிகரிக்கும் எண்ணமில்லை..!! அமைச்சர் முத்துசாமி உறுதி..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மதுவிலக்கு மற்றும் ஆயத்தீவுத்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் டாஸ்மாக் கடையில் ஆய்வு மேற்கொண்டார். பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் "தமிழக முழுவதும் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் ஊழியர்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை குறித்து அனைத்து தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளையும் அழைத்து தனித்தனியாக ஆலோசனை நடத்தினேன்.

இதில் டாஸ்மாக் ஊழியர்களின் பாதுகாப்பு பிரச்சனை குறித்து பிரதானமாக கூறப்பட்டுள்ளது அதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ளும். டாஸ்மாக் கடை மூலம் தமிழக அரசுக்கு வருமானம் கூட்ட வேண்டும் என்பது தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் எண்ணம் அல்ல.

டாஸ்மாக் கடைகள் மூலம் தவறான விற்பனை வருவதற்கான காரணங்களை ஆய்வு செய்து அதற்குரிய ஒழுங்கு நடவடிக்கைகளை எடுக்குமாறு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டு உள்ளார். அதற்கான ஆய்வுகளை தான் தற்பொழுது மேற்கொண்டு உள்ளோம்.

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இருக்கக்கூடிய டாஸ்மாக் கடைகளில் நேரடியாக சென்று பணியாற்றும் ஊழியர்களை அழைத்து அவர்கள் மூலமாக என்னென்ன சிக்கல்கள் உள்ளன என்பது குறித்து கேட்டறிய உள்ளோம். பாட்டிலுக்கு பத்து ரூபாய் கூடுதலாக வாங்குவது சில இடங்களில் நடந்திருக்கலாம். இது அனைத்து கடைகளிலும் வாங்கப்படுவதாக கூறக்கூடாது.

அவ்வாறு வாங்கும் ஒரு சிலரின் மீதும் உரிய உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இனி 100% பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவது தடுக்கும் நிலையை உருவாக்குவோம். ஏற்கனவே தமிழக முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்கள் கோரிக்கை வைக்கும் டாஸ்மாக் கடைகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அனுப்புமாறு டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கோவில்கள், கல்வி நிலையங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இதில் சிக்கல் என்னவென்றால் டாஸ்மாக் கடையை மூடிய பிறகு கள்ள சாராயத்தை நோக்கி மக்கள் சென்று விடக்கூடாது என்பதையும் நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டிய உள்ளது. இன்று டாஸ்மாக் கடை மூடுவது குறித்து கேள்வி கேட்பவர்கள் நாளை இதைப் பற்றியும் கேள்வி கேட்பார்கள்.

எனவே இந்த இரண்டு பிரச்சனைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டிய உள்ளது. தமிழக அரசுக்கு டாஸ்மாக் வியாபாரத்தை அதிகப்படுத்த வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. தமிழக முழுவதும் 500 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்ட பிறகு அதில் பணிபுரியும் ஊழியர்களை வெளியில் அனுப்பும் எண்ணம் எங்களுக்கு கிடையாது. அதிகம் வியாபாரம் ஆகும் டாஸ்மாக் கடைகளுக்கு அவர்கள் பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள்" என செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Muthuswamy said Tasmac has no intention in collection hike


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->