"வன்னியர் சமுதாய மக்கள் குறித்து நான் தவறாக எதுவும் பேசவில்லை" அந்தர் பல்டி அடித்த முத்தரசன்!! - Seithipunal
Seithipunal


வன்னியர் சமுதாய மக்கள் குறித்து நான் தவறாக எதுவும் பேசவில்லை. பொன்பரப்பியாக இருந்தாலும் சரி, குச்சிபாளையமாக இருந்தாலும் சரி, தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். என வேலூரில் நடந்த கூட்டத்தில் முத்தரசன் பேசியுள்ளார். 

Image result for mutharasan seithipunal

வேலூரில் நடைபெற்ற இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நிகழ்வின் போது செய்தியாளர்களிடம் பேசிய முத்தரசன், " தி.மு.க. தலைமையிலான மதசார்பற்ற கூட்டணிதான் சட்டமன்ற இடைத்தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றிபெறும். அதிமுக தோல்வி பயத்தில் உள்ளது.

அதனால் தான், 3 எம்.எல்.ஏ.க்களுக்கும்  அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி நோட்டீசு அனுப்பியுள்ளார். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களை தகுதி நீக்கம் செய்யக்கூடாது. உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் அதிமுக தள்ளிப்போடகாரணம் மக்கள் மீதான பயமே. 

உள்ளாட்சி தேர்தல் நடத்தாதலால் வீட்டு வரி, குடிநீர் வரி ஆகியவை அதிகப்படியாக வசூலிக்கப்படுகிறது. வறட்சி மாவட்டங்கள் அறிவிக்கப்படும் அதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. குடிநீர் பிரச்சனைக்கு பொற்கால அடிப்படையில் தீர்வு காணவேண்டும். 

நான் வன்னிய மக்கள் குறித்து தவறான கருத்துக்களை எதுவும் பேசவில்லை. தவறு யார் செய்தாலும் தண்டிக்கப்பட வேண்டும். பொன்பரப்பி விவகாரமாக இருந்தாலும் சரி, குச்சிபாளையம் விவகாரமாக இருந்தாலும் சரி இதுதான் சரியானது. " என கூறியுள்ளார். 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

mutharasan says about vanniyar


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->