திமுக ஆட்சியில் டிசம்பர் 6 என்றாலே இஸ்லாமியர்கள் பயந்து நடுங்குவார்கள்! திமுக ஆட்சிக்கு வந்தாலே கலவரம் தான் நடக்கும்! - Seithipunal
Seithipunal


கூஜா வெடிகுண்டு கலாச்சாரம் வந்ததே திமுக ஆட்சியில் தான்! பழைய பத்திரிகைய எடுத்து பாருங்க!

சென்னை ராயப்பேட்டைக்கு அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி வருகை புரிந்தார். அதிமுக அலுவலகம் பராமரிப்பு பணி மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த வருகை புரிந்துள்ளதாக கூறப்படுகிறது. அது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விகளுக்கு ஜெயக்குமார் பதில் அளித்தார். 

சட்ட ஒழுங்கு பிரச்சனையை பேணிக் காப்பதில்  தமிழகம் முதலிடத்தில் இருக்கும் போது பெட்ரோல் வெடிகுண்டு வீசும் சம்பவம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதை அதிமுக எவ்வாறு பார்க்கிறது என்று செய்தியாளர் கேட்டார். 

அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார் "தமிழக அரசியலை அதிமுக ஆட்சி திமுக ஆட்சி என்று பார்த்தால் எம்ஜிஆர் ஆட்சி ஜெயலலிதா ஆட்சி எவுனமும் திமுக ஆட்சியை கருணாநிதி ஆட்சி ஸ்டாலின் ஆட்சி என்று பிரித்து பார்க்க வேண்டும். எப்பொழுதெல்லாம் திமுக ஆட்சி வருகிறதோ அப்போதெல்லாம் வன்முறை கலாச்சாரம் தலை தூக்கும்.

1998 இல் அத்வானி தமிழ்நாட்டில் சுற்று பயணமாக கோயம்புத்தூர் வந்தார். கோயம்புத்தூரில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. அதில் பொதுமக்கள் பலர் உயிரிழந்தனர். அந்த நிகழ்வினால் இஸ்லாமிய மக்கள் கடுமையாக துன்புறுத்தப்பட்டனர். தங்களின் ஆட்சி போய்விடும் என்று டெல்லி தலைமை கொடுத்த அழுத்தத்தினால் எல்லாரையும் கைது செய்தனர். மசூதியில் நாய்களை விட்டு சோதனை நடத்தியது. இஸ்லாமியர் வீடுகளில் சோதனை இடுவது, பர்தாவை தூக்கிப் பார்ப்பது என்று இஸ்லாமியர்கள் அவமானப்படுத்தப்பட்டனர். திமுக ஆட்சியில் டிசம்பர் 6 என்றாலே இஸ்லாமியர்கள் பயந்து நடுங்குவார்கள். 

2001ல் ஜெயலலிதா ஆட்சி வந்த உடன் டிசம்பர் 6 என்றாலே இஸ்லாமிய பெருமக்கள் சுதந்திர தினம் போல் நிம்மதியாக இருந்தனர். அதிமுக ஆட்சியில் எந்த சாதி, மத கலவரங்கள் நடைபெற்றது இல்லை. அதற்குக் காரணம் ஜெயலலிதா அவர்களின் திறமையான அரசு ஆளுமையால் தான். 

2006 முதல் 2011 வரை முதலமைச்சராக ஸ்டாலினுடைய அப்பா அதாவது மு.கருணாநிதி அவர் ஆட்சி செய்த போது திருநெல்வேலியில் கூஜா வெடிகுண்டு கலாச்சாரம் வந்தது. 2006 செய்தித்தாளை எடுத்து பார்த்தால் உங்களுக்கே தெரியும். 

சட்டத்தை தன் கையில் எடுப்பவர்களுக்கு இந்த அரசை பார்த்து பயம் இல்லை. இந்த அரசு எல்லாவிதமான கடுமையான நடவடிக்கைகளையும் எடுத்தால் கண்டிப்பாக அமைதி தவழும். 

அந்த அளவிற்கு எந்த வித நடவடிக்கைகளையும் திமுக அரசு எடுப்பதற்கு திராணி இல்லை, தெம்பு இல்லை, வக்கில்லை இல்லை என ஸ்டாலின் சொல்லுவார் அதே போல் நான் சொல்ல கடமைப்பட்டுள்ளேன். 

மக்கள் எதிர்பார்ப்பது அடிப்படை கட்டமைப்பு மற்றும் சட்ட ஒழுங்கு. இதை இரண்டை தான் மக்கள் விரும்புகிறார்கள். வீட்டிற்கு சென்றால் நிம்மதியாக உறங்க வேண்டும் என்று தான். ஆனால் இன்று பத்திரிகை எடுத்தாலே ஆங்காங்கே பெட்ரோல் குண்டு வீசுவது தான் முதன்மை செய்தியாக வந்து கொண்டிருக்கின்றன.

 கோயம்புத்தூர், மதுரை, கன்னியாகுமரி, சேலம் என இருந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள். தற்பொழுது சென்னை பல்லாவரம் அருகே உள்ள சிட்லபாக்கம் பகுதியில் விடியற்காலை 3:30 மணிக்கு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. அந்த அளவிற்கு சட்ட ஒழுங்கு சீர் அழிந்துவிட்டது. 

 அதே போல் கத்தி கலாச்சாரம், கஞ்சா கலாச்சாரம், வெடிகுண்டு கலாச்சாரம், சூதாட்டக் கலாச்சாரம் இதையெல்லாம் சர்வசாதாரணமாக திமுக ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதனால் பொதுமக்கள் எந்த அளவுக்கு சிரமப்பட்டு உள்ளனர்" என திமுக அரசின் வரலாற்றை கூறி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Muslims will tremble with fear on December 6 in DMK rule


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->