ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி முருகன் உண்ணாவிரதம்! சிகிச்சை அளித்து காப்பாற்றுமாறு மாமியார் உயர் நீதிமன்றத்தில் மனு! - Seithipunal
Seithipunal


காவலர்களை அடிக்க முயன்றதாக வழக்கு!

முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன் 30 ஆண்டுகளாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர் பல்வேறு காரணங்களுக்காக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்களை தாக்க முயன்றதாக அவர் மீது பாகாயம் காவல்நிலத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

இந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த பாகாயம் காவல் நிலைய போலீசார் முருகன் மற்றும் பணியில் இருந்த காவலர்களிடம் விசாரணை செய்தனர். இந்த வழக்கு வேலூர் குற்றவியல் முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு முருகன் ஆஜர் படுத்தப்பட்டார். 

இந்நிலையில் இந்த வழக்கை முடித்து வைக்க கோரி முருகன் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். கடந்த ஐந்தாம் தேதி அவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டதால் சிறைச்சாலையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. அவர் தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார். 

இந்த நிலையில் வேலூர் சிறையில் தொடர் உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனுக்கு சிகிச்சை அளித்து காப்பாற்ற கோரி அவரது மாமியாரும், நளினியின் தயாருமான பத்மா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Murugan Mother in law appeal to the High Court


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->