தேர்தல் முடிந்த உடனே கட்சியில் இருந்து விலகல்..!! அதிர்ச்சியில் கமல்.!! - Seithipunal
Seithipunal


மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனுக்கு மக்களவைத் தேர்தலில் சீட் வழங்கப்படவில்லை. அதற்கு மாறாக 2025ல் ராஜ்யசபா சீட் வழங்கப்படும் என்று ஒப்பந்தம் கையெழுத்தானது. இதையடுத்து நடிகர் கமல்ஹாசன், திமுக கூட்டணியை ஆதரித்து சில தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்த நிலையில், நேற்று மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்த உடனேயே அக்கட்சியின் மாணவர் அணித் தலைவராக இருந்த சங்கர் ரவி மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகுவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “மக்கள் நீதி மய்யத்தின் கட்சி பதவி மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்கிறேன். கட்சியில் எனக்கு எதிராகத் தொடர்ந்து பல பிரச்சனைகள் நடந்து வருகின்றன. இதனால் தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த உடன் கட்சியில் இருந்து விலக முடிவு எடுத்து இருந்தேன். இது சில வாரங்களுக்கு முன்பே எடுத்த முடிவு. சமீபத்தில் நடந்த சில சம்பவங்கள் எனக்கு ஏமாற்றத்தை அளித்தன. அது நம்பிக்கையின்மை, போலியான உத்தரவாதம் காரணமாக ஏற்பட்டவை. குறிப்பாக, எனது பணிகளை நிறுத்த அழுத்தம் இருந்ததாக நான் உணர்ந்தேன்.

இது ஒன்றும் எனக்குப் புதிதல்ல என்ற போதிலும் கட்சித் தலைமையின் மீது எனக்கு அதிக நம்பிக்கை இருந்தது. இருப்பினும் நான் நினைத்ததிற்கு நேர்மாறாகவே விஷயங்கள் நடந்தன. எனக்கு வெளியே சில வாய்ப்புகள் இருந்த போதிலும் அதைத் தவிர்த்துவிட்டு கட்சிக்காக உழைத்தேன். ஆனால், உட்கட்சி அரசியலால் நான் சலிப்படைந்துவிட்டேன். இதனால் நான் இப்போது உறுதியான முடிவை எடுத்துள்ளேன். கட்சியில் நீண்ட காலமாகப் பல உட்கட்சி பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறேன். இதில் யாருடைய பெயரையும் நான் குறிப்பிட விரும்பவில்லை. 

நேற்று வரை நான் கட்சிக்காக உழைத்து இருக்கிறேன். கடந்த 3 ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் கட்சி சார்பில் குறைந்தது ஒரு நிகழ்ச்சியை நடத்தி வருகிறேன். கடைசி வரை நான் கட்சிக்காக உழைத்தேன். வரும் காலத்திலாவது மக்கள் நீதி மய்யம் இளைஞர்களையோ அல்லது கட்சிக்காக உழைத்தவர்களையோ புறக்கணிக்காது என நம்புகிறேன். நான் எனது சொந்த அனுபவத்தில் இருந்து இதைச் சொல்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MNM party excuetive step down


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->