ஐந்து எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டு உடைமையாக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு.! - Seithipunal
Seithipunal


ஐந்து எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டு உடைமையாக்கப்படும் - அமைச்சர் தங்கம் தென்னரசு பேச்சு.!

இன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் தொழில் துறை சார்ந்த மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலளித்து பேசினார்.

அதாவது, ‘’இந்தியாவிலேயே இரண்டாவது தொழில் வளர்ச்சி உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. மின்கட்டண உயர்வைப் பொறுத்தவரை தொழில் நிறுவனங்களில் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. 

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் தொழில் துறையில் ரூ.75 ஆயிரம் கோடி முதலீடுகள் வந்துள்ளன. முதலமைச்சரின் வழிகாட்டுதலின் படி தொழித்துறை நிறுவனங்கள் பாதுகாப்பாகவும், லாபகரமாகவும் இயங்கி வருகிறது.

இந்தியாவில் தமிழ்நாட்டின் உற்பத்தி பங்கு 24.47 சதவீதமாக உள்ளது. அதேபோல், 37 சதவீத வேலைவாய்ப்புகள் உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ் வளர்ச்சித் துறையை பொறுத்தவரை பல ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். 

தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு என்பது திராவிட உணர்வோடு ஒட்டி வந்துள்ளதால் நம் அனைவருக்கும் அந்த உணர்வு என்பதுள்ளது. அதனால், அது எந்த வடிவில் எந்த விதத்தில் வந்தாலும் அதனை எதிர்ப்பதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து தயாராக இருக்கிறோம். 

சமீபத்தில் ஆவின் தயிர் பாக்கெட்டில் கூட அந்த பிரச்சினை வந்தது. அதில் தஹி எங்களுக்கு நஹி என்று இருந்தது. அதற்கு தயிர் எங்களுக்கு உயிர்; அது வெறும் உணவல்ல அது எங்களின் உணர்வு என்று தெரிவித்தோம்.

அதுமட்டுமல்லாமல், ஐந்து எழுத்தாளர்களின் நூல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த நூல்களை நாட்டு உடைமையாக்கப்படும். அனைத்து கல்லூரிகளிலும் இளைஞர் இலக்கிய பாசறை திங்கள் தோறும் நடத்தப்படும்’’ என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister thangam thennarasu speach in assembly


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->