பள்ளிகள் திறப்பு எப்போது?.. அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.!! - Seithipunal
Seithipunal


கரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக ஊரடங்கு அமலாகியுள்ளது. இந்த ஊரடங்கு ஐந்தாவது முறையாக ஜூன் 30 ஆம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தை பொறுத்த வரையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு நீங்கலாக பொதுப்போக்குவரத்து இயக்கம் துவங்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு தேர்வுகள் மற்றும் 11 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு விடுபட்ட பாடங்களுக்கான தேர்வுகள் போன்றவை எப்போது நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில், ஜூன் மாதம் 15 ஆம் தேதி முதல் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் வெளியிடப்பட்டது. மாணவர்களுக்கு தேவையான போக்குவரத்து உதவி மற்றும் சமூக இடைவெளி போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், பாடங்களை குறைப்பது தொடர்பாக 16 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். மேலும், பத்தாம் வகுப்பு தேர்வுகள் முடிந்து, முடிவுகள் வெளியான பின்னரே பெற்றோர்களிடம் பள்ளிகள் திறப்பு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெறும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Minister Sengottaiyan press meet about School opening


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->