கரூர் சம்பவத்திற்கு யார் காரணமா இருந்தாலும் இதுதான் நடக்கும் - அமைச்சர் முத்துச்சாமி பரபரப்பு பேட்டி.!!  - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் வீட்டுவசதி மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் தெரிவித்ததாவது:- "கரூர் துயர சம்பவம் தொடர்பாக அதிமுகவும், பாஜகவும் அரசியல் லாபத்துக்காக தமிழக அரசை குறை கூறி வருகின்றன. 

இந்த சம்பவம் தொடர்பாக முழு பிரச்சனைகளையும் அரசு வீடியோக்கள் மூலம் விளக்கியுள்ளது. இதன் மூலம் மக்கள் உண்மைகளை முழுமையாக அறிந்து கொள்வார்கள். இந்தச் சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு அரசின் விசாரணை ஆணையமும் விசாரணையை தொடங்கியுள்ளது. நீதிமன்றமும் பல்வேறு வழிமுறைகளை வழங்கியுள்ளது. 

ஆகவே விசாரணையின் அடிப்படையில் காவல்துறை நடவடிக்கை எடுக்கும். விஜய் மீது நடவடிக்கை எடுக்க பயம் இல்லை. கரூர் சம்பவத்துக்கு காரணம் யாராக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். கரூர் துயர சம்பவம் குறித்து அறிந்ததும் நள்ளிரவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய உதவிகளை வழங்கினார்.

சிறுநீரகம் திருட்டு விவகாரத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவமனைக்கு அறுவை சிகிச்சை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் விசாரணை முடிந்த பிறகே உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

minister muthusami press meet about karoor incident in erode


கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...



Advertisement

கருத்துக் கணிப்பு

வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப்பணி...




Seithipunal
--> -->