வேளாண் பட்ஜெட் || ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைக்க 6.27 கோடி ஒதுக்கீடு.! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் நேற்று 2024-2025ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அப்போது, பல்வேறு புதிய திட்டங்களை அவர் அறிவித்தார்.

இதைத்தொடர்ந்து இன்று சட்டப்பேரவையில் 2024-2025ம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதனை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வருகிறார். இதில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகியுள்ளது.

அதாவது, கன்னியாகுமரியில் 3.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தேனீ முனையம் உருவாக்கப்படும்.

* நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தின் கீழ் உற்பத்தித் திறனை மேம்படுத்த ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

* கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டத்திற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

* சிறந்த உயிர்ம விவசாயிக்கான நம்மாழ்வார் விருதுகளை வழங்க ரூ. 5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படும்.

* ரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து மண்ணின் வளம் காக்க 6.27 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்று வேளாண்மைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

minister mrk panneer selvam submit agriculture budget


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->