மெட்ரோ ரயில் டிக்கெட்டை பெற புதிய வசதி அறிமுகம்.! - Seithipunal
Seithipunal


சென்னை மெட்ரோ ரயிலில் பேடிஎம் மூலம் டிக்கெட் பெற வசதியை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகம் செய்துள்ளது.

சென்னையில் நிரம்பி வழியும் போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் பொதுமக்கள் எளிதாக பயணம் செய்ய மெட்ரோ ரயில் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மெட்ரோ ரயிலில் தினமும் ஏராளமான பொதுமக்கள் பயணித்து பயனடைந்து வருகின்றனர்.

குறிப்பாக பண்டிகை நாட்களில் வழக்கத்தை விட அதிகமான பொதுமக்கள் பயணம் செய்கின்றனர். மேலும் தற்போது சென்னை மெட்ரோ ரயிலை பயன்படுத்தும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், பயணிகளின் வசதிக்கேற்ப புதிய வசதிகளை அறிமுகம் செய்து வருகிறது.

சென்னை மெட்ரோ ரயிலின் தற்போது டிக்கெட் எடுக்க கவுண்டர்கள் மூலம் டிக்கெட் கொடுக்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் பேடிஎம் மூலம் டிக்கெட் எடுக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் புதிய திட்டம் அறிமுகம் செய்துள்ளது.

சமீபத்தில் வாட்ஸ் அப் மூலம் டிக்கெட்டை பதிவு செய்து கொள்ளும் முறையை அறிமுகப்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Metro rail ticket take Paytm application


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->