மீனாட்சி அம்மன் கோவிலில் பரபரப்பு! சிக்கிய இளம்பெண்கள்! பாய்ந்தது வழக்கு! - Seithipunal
Seithipunal


உலக புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு நாள்தோறும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். 

மீனாட்சி அம்மன் கோவிலுக்கு பயங்கரவாத அச்சுறுத்தல் இருப்பதன் காரணமாக 4 கோபுர நுழைவு வாசல்களிலும் மத்திய பிரிவு பாதுகாப்பு படை காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரையும் தீவிரமாக சோதனை செய்த பின் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

இரண்டு நாட்களுக்கு முன்பு மீனாட்சி அம்மன் கோவில் மேற்கு கோபுரத்தை படம் பிடிப்பதற்காக டிரோன் கேமரா இயக்கப்பட்டதில் அந்த டிரோன் திடீரென கோபுரத்தின் மீது மோதி கீழே விழுந்துள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் டிரோனை கைப்பற்றி விசாரணை நடத்தினர். விசாரணையில், பெங்களூரை சேர்ந்த 2 பெண் என்ஜினீயர்கள் சித்திரை வீதியில் உள்ள கோவிலுக்கு சொந்தமான விடுதியில் தங்கி கோபுரத்தை படம் பிடிப்பதற்காக டிரோனை பறக்க விட்டது தெரிய வந்தது.

இந்நிலையில், 2 பெண்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அவர்கள் மகாராஷ்டிராவை சேர்ந்த சயலிசிங்கர், சுருதி உர்குடே என தெரியவந்தது. இவர்கள் சமூக வலைத்தளமான யூ-டியூபில் பதிவிடுவதற்காக கோபுரங்களை படம் பிடித்ததாக கூறப்படுகிறது. 

இருப்பினும் போலீசார் அனுமதியின்றி இந்த செயலை செய்ததற்காக 2 பெண் என்ஜினீயர்கள் மீது மீனாட்சி அம்மன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

meenakshi amman temple gopuram filed 2 female


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->