சொத்துக்காக அண்ணியைக் கொன்று புதைத்த நபர் - புதுக்கோட்டையில் சோகம்.! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விராலிமலை அருகே ஆம்பூர்பட்டியைச் சேர்ந்தவர்கள் ஆரோக்கியசாமியின் மகன்கள் சேவியர், ராயப்பன். இவர்கள் இருவரும் தந்தையின் சொத்துக்களை சரிசமமாக பிரித்துக் கொண்டனர். இதில், ராயப்பனுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர். ஆனால், சேவியருக்கு திருமணமாகி குழந்தைகள் இல்லை.

இந்த நிலையில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சேவியர் காலமாகிவிட்டதால், அவரது பெயரில் இருந்த சொத்துகளை அவரது மனைவி தனது பெயருக்கு மாற்றிக் கொண்டார். இந்த விஷயத்தில் சேவியரின் மனைவிக்கும் ராயப்பனுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. 

இந்த நிலையில், சேவியரின் மனைவி நேற்று முன்தினம் மாலையில் தனது நெல் வயலில் இருந்த மயில்களை விரட்டிக் கொண்டிருந்தார். அப்போது அவரது சகோதரர் செல்போனில் அவரிடம் பேசியுள்ளார். ஆனால், அவர் மீண்டும் 7 மணி அளவில் அக்காவை போனில் அழைத்த போது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. 

இதனால் சந்தேகம் அடைந்த அவர், உடனடியாக ஆம்பூர்பட்டிக்கு விரைந்து வந்துள்ளார். அங்கு வீட்டில் தனது சகோதரி இல்லாததால் பதற்றமான அவர், உறவினர்களுடன் சேர்ந்து பல இடங்களில் தேடி உள்ளார். ஆனால் எங்கேயும் கிடைக்காததால், இது தொடர்பாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்திய போது சேவியருடைய மனைவியின் வயலில் இருந்து சிறிது தூரத்தில் காட்டுப் பகுதியில் மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணறு ஒன்றில் புதிதாக மண் போட்டு மூடி இருப்பதை கண்டு சந்தேகமடைந்தனர். உடனே பொக்லைன் இயந்திரம் மூலம் ஆழ்துளை கிணறு தோண்டப்பட்டது. 

அப்போது, கொலை செய்யப்பட்ட ஆரோக்கிய மேரியின் உடல் ஆழ்துளை கிணற்றில் சொருகி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அங்கிருந்து உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man murder annan wife in puthukottai for property


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->