விமான நிலையத்தில் சிக்கிய போதைப்பொருள் - வாலிபர் கைது.! - Seithipunal
Seithipunal


சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை இன்று வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருந்தனர். அப்போது, இந்தோனேசியா நாட்டைச் சேர்ந்த அகமது இத்ரீஸ் என்பவர் சுற்றுலா விசாவில் லாவோஸ் நாட்டில் இருந்து சிங்கப்பூர் சென்று, பின்னர் அங்கிருந்து சென்னை வந்தது தெரியவந்தது. இருப்பினும் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதால் அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர் முன்னுக்குப் பின் முரணாக பேசியதால், அவரை சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று தீவிரமாக விசாரித்தனர். பின்னர் அவரது உடைமைகள் மற்றும் உள்ளாடைகளை பரிசோதனை செய்ததில், சிறிய பார்சல்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அதனை மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் பிரித்து பார்த்தபோது, அது போதைப்பொருள் என்பது தெரியவந்தது. 

இது தொடர்பாக அதிகாரிகள், அது போதைப் பொருள் அல்ல என்றும். உடலுக்கு சக்தி தரும் ஊட்டச்சத்து பவுடர் என்றும் தெரிவித்துள்ளார். இதையடுத்து அதிகாரிகள் அந்த போதைப்பொருளை ஆய்வுக்கூடத்திற்கு எடுத்துச் சென்று பரிசோதித்த போது அது கொக்கைன் போதைப்பொருள் என்பது தெரியவந்தது. 4 கிலோ எடையிலான அதன் சர்வதேச மதிப்பு சுமார் 15 கோடி ரூபாய் ஆகும்.

இதைத் தொடர்ந்து, மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள் இத்ரீஸை கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், அதிகாரிகள் போதைப் பொருளை சென்னையில் யாரிடம் கொடுப்பதற்காக கடத்திக் கொண்டு வந்தார் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for kidnape drugs in chennai airprot


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->