தினமும் ஓர் ஆட்கொணர்வு மனு.. கர்ப்பமாகும் சிறுமிகள்.. நீதிபதிகள் வேதனை..!! - Seithipunal
Seithipunal


மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பெற்றோர் ஒருவர் காணாமல் போன தனது மைனர் மகளை கண்டுபிடித்து தர வேண்டும் என ஆக்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதிகள் சிவக்குமார் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் அமர்வின் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்த மனு மீது கருத்து தெரிவித்த நீதிபதிகள் "தினமும் சிறுமிகளை காணவில்லை என பல ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்படுகிறது.

இளம் சிறுமிகள் காதலித்து பாலியல் உறவுக்கு ஆளானதும் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தும்போது சில சிறுமிகள் கர்ப்பமாக இருப்பது தெரிய வருகிறது. இது போன்ற விஷயங்கள் மிகவும் வேதனை அளிக்கிறது. சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய செயல்களை இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்.

இது போன்ற செயல்களை முழுமையாக தடுக்கும் வகையில் காவல்துறையில் நிரந்தரமான அமைப்பு உருவாக்க வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் மனிதம் மற்றும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவினர் சிறுமிகள் காணாமல் போகும் புகார்களை விரைந்து விசாரணை செய்து குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

சிறுமிகளிடம் ஆசையை தூண்டி வாழ்க்கையில் விளையாடும் இது போன்ற விவகாரத்தில் உறுதியான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து சிறுமிகள் பாதிக்கப்படுவதை தடுக்க முடியாது.

தமிழக முழுவதும் எத்தனை இடங்களில் கடத்தல் தடுப்பு பிரிவு செயல்படுகிறது. அவர்கள் ஆண்டுக்கு எத்தனை வழக்குகளை கையாளுகிறார்கள், எத்தனை வழக்குகளில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது, இந்த பிரிவில் எத்தனை காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர் போன்ற அனைத்து விவரங்களையும் ஆவணங்கள் மற்றும் புள்ளிவிவரங்களுடன் தமிழக டிஜிபி தரப்பில் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு இந்த வழக்கின் விசாரணையை ஜூன் 5-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MaduraiHC Judges saddened in minor girls in love affairs


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->