அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு.! - Seithipunal
Seithipunal


வருகிற பதினைந்தாம் தேதி தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் உள்ள அலங்காநல்லூரை அடுத்த குறவன்குளம் கிராமத்தில் சுற்றுலாத்துறை சார்பில் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 

இந்த நிகழ்ச்சியில், உள்நாடு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி வெளிநாடு சுற்றுலா பயணிகளும் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 
இதில், கலந்துகொள்வதற்காக அவர்கள் மதுரை சுற்றுலா அலுவலகத்திலிருந்து 15-ந் தேதி காலை தனி பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்படுவார்கள். 

அங்கு அவர்களுக்கு குறவன்குளம் கிராமத்தில் தமிழக பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டு பின்னர், அவர்கள் கிராம மக்களுடன் இணைந்து பொங்கல் வைக்கும் முறையை நேரடியாக கண்டு மகிழலாம். 

இதையடுத்து, பரதம் மற்றும் கிராமிய கலை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. இதைத்தொடர்ந்து, அலங்காநல்லூரில் 17-ந் தேதி நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கு அவர்கள் தனிப் பேருந்து மூலம் அழைத்துச் செல்லப்பட்டு, பார்வையாளர் மாடத்தில் அமர்ந்து ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை கண்டுகளிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

இந்த நிலையில், மதுரை மாவட்ட சுற்றுலா துறை சார்பில் வருகிற 15, 17-ந் தேதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்க விரும்பும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகள் கடவுச் சீட்டு உள்ளிட்ட விவரங்களுடன் மதுரை மேலவெளி வீதியில் உள்ள மாவட்ட சுற்றுலா அலுவலகத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

madurai Tourism department invitation to foriegn tourists for alanganallur jallikattu


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->