மதுரை || ஆளும் கட்சி அமைச்சர் பெயர் சொல்லி மாநகராட்சி அதிகாரி லஞ்சம் வாங்குகிறார்! மேடையில் புலம்பிய ரியல் எஸ்டேட் அதிபர்! - Seithipunal
Seithipunal


அப்ரூவ் வாங்க ஏக்கருக்கு ஏழு லட்சம் கேட்கும் மாநகராட்சி அதிகாரிகள்!

திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு தரப்பட்ட மக்களும் புலம்பும் நிலையில் உள்ளனர். விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு என விலைவாசி உயர்வில் மக்கள் திண்டாடுகின்றனர். பல்வேறு துறைகளில் அதிகாரிகளும் அமைச்சர்களும் லஞ்சம் கேட்பதால் தமிழகத்தில் தொழில்துறை முடங்கும் நிலையில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அரசின் தெண்டரிலும் சதவீத அடிப்படையில் கமிஷன் கேட்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் உள்ளன. திமுகவின் பொதுக்குழுவில் ஸ்டாலினே புலம்பும் அளவுக்கு மூத்த அமைச்சர்களும் கட்சி நிர்வாகிகளும் எப்படி நடந்து கொள்கின்றனர் என்பது வெட்ட வெளிச்சமானது.

இந்நிலையில் இன்று மதுரை மாநகராட்சியில் தமிழக அரசின் சார்பாக கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு துறையில் உள்ள தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். மதுரை மாவட்டத்தில் மாநகராட்சியில் நில வரைபடத்திற்கு அனுமதி வழங்க மாநகராட்சி அதிகாரி அலாவுதீன் ஒரு ஏக்கருக்கு 7 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்பதாக ரியல் எஸ்டேட் தொழிலதிபர் ஒருவர் மக்கள் கருத்து கேட்பு கூட்டத்தின் மேடையில் குற்றம் சாட்டியுள்ளார். இவ்வாறு வாங்கப்படும் லஞ்ச பணம் அமைச்சரின் பெயரைச் சொல்லி கேட்பதாக குற்றச்சாட்டு வைத்தார். 

இதுகுறித்து மேடையில் பேசிய அந்த நபர் "மாநகராட்சியில் உள்ள ஒட்டுமொத்த 21 வார்டிற்கும் ஒரு முக்கியமான பிரச்சனை. மேடையில் உள்ள அனைத்து அதிகாரிகளுக்கும் அமைச்சர்களுக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் மாநகராட்சி ஆணையாளருக்கும் ஒரு கோரிக்கை. நில வரைபட ஒப்புதல் வழங்கும் அதிகாரி அலாவுதீன் வருவதற்கு முன்பும் வருவதற்கு பின்பும் என்று எடுத்துக் கொண்டால் ரியல் எஸ்டேட் துறை இப்பொழுது முடங்கியுள்ளது. அவர் நில வரைபடத்திற்கு ஒப்புதல் வழங்க ஏக்கருக்கு 7 லட்சம் ரூபாய் அமைச்சரின் பெயரைச் சொல்லி கேட்கிறார்" என பேசிக் கொண்டிருக்கும் போது கூட்ட அரங்கில் சலசலப்பு உண்டானது. இதனை அடுத்து அவருடைய பேச்சை நிப்பாட்டிய அங்கிருந்தவர்கள் அவரை மேடையில் இருந்து கீழே இறக்கி விட்டனர். பின்னர் மேடையில் இருந்தவர்கள் அவரை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். 

ஏற்கனவே மகனின் திருமணவிழா சர்ச்சையில் சிக்கிய மதுரையை சேர்ந்த அமைச்சர் தற்பொழுது மக்கள் கருத்து கேட்டு கூட்டத்தில் அதிகாரிகள், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் நேரடியாக குற்றம் சுமத்திது மதுரை வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Madurai corporation official takes bribe by naming a ruling party minister


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->