விஏஓ-க்களை பாதுக்காக்க தனி சட்டம்! தமிழக அரசுக்கு நீதிமன்றம் பரிந்துரை! - Seithipunal
Seithipunal


தமிழக முழுவதும் பணியாற்றி வரும் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் வகையில் சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அருள்ராஜ் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் "தமிழக முழுவதும் 12,500க்கும் மேற்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

கிராமப்புறங்களில் சட்டம ஒழுங்கு பேணிக்காப்பது, அரசு நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டால் தடுப்பது, அரசின் திட்டங்களை மக்களைச் சென்றடைய செய்வது, மணல் கொள்ளையை தடுப்பது போன்ற சமூகப் பணிகளில் கிராம நிர்வாக அலுவலர்கள் நேரடியாக ஈடுபடுகின்றனர். 

கடந்த ஏப்ரல் மாதம் 25ஆம் தேதி மணல் கொள்ளையர்களால் தூத்துக்குடி மாவட்ட கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூர்து பிரான்சிஸ் அவருடைய அலுவலகத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். மேலும் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது பல்வேறு இடங்களில் கொலை முயற்சி சம்பவங்களும் அரங்கேறியுள்ளது. 

தமிழகத்தில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் மீது தாக்குதல் தடுக்கும் வகையில் சட்டம் இயற்றப்பட்டது போல கிராம நிர்வாக அலுவலர்கள் பாதுகாப்புக்கு தனி சட்டம் இயற்ற தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் கொலை செய்யப்பட்ட பின் இழப்பீடு வழங்குவதால் எந்த பலனும் கிடையாது. 

ஏற்கனவே பாதுகாப்புச் சட்டம் இயற்ற கோரி கடந்த மே மாதம் அளித்த விண்ணப்பங்கள் மீது தமிழக அரசு தற்போது வரை பரிசீலனை செய்யவில்லை" என அந்த மனுவில் தெரிவித்திருந்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கங்காபூர்வாலா மற்றும் நீதிபதி பரதசக்கரவர்த்தி ஆகியோர் அமர்வின் முன்பு விசாரணைக்கு வந்தபோது மனுதாரரின் கோரிக்கை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தமிழக அரசு விண்ணப்பத்தின் உரிய பரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கினை முடித்து வைத்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MadrasHC order TNGovt separate law for VAO protection


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->