மிதிவண்டியில் இந்தியாவை வலம் வரும் காதல் தம்பதிக்கு மதுரையில் சுய சரிதை புத்தகத்துடன் வரவேற்பு.!! - Seithipunal
Seithipunal


மிதிவண்டியில் இந்தியாவை வலம் வரும் காதல் தம்பதிக்கு மதுரையில் சுய சரிதை புத்தகத்துடன் வரவேற்பு.!!

மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் ரோகித்-அஞ்சலி தம்பதியினர். காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் இருவரும் உலக அமைதிக்காக கடந்த ஏப்ரல் மாதம் மிதிவண்டியில் பயணம் தொடங்கி மகாராஷ்ட்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்கள் சென்று பிறகு தமிழகத்தில் உள்ள கோயம்புத்தூருக்கு வந்தனர்.  

அங்கிருந்து , திருநெல்வேலி வழியாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் வழியாக மிதிவண்டியில் பயணம் செய்து நேற்று ராமேஸ்வரம் வந்தடைந்தனர். அங்கிருந்து புறப்பட்டு இன்று மதியம் மதுரை காந்தி மியூசியம் வந்தனர். 

அவர்களுக்கு பாரதி யுவகேந்திரா நிறுவனர் நெல்லை பாலு மற்றும் காந்தி அருங்காட்சியக பொறுப்பாளர்கள் நந்தாராவ் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மகாத்மா காந்தியின் சுய சரிதை புத்தகம் வழங்கி கவுரவித்தனர்.

இது குறித்து ரோகித்-அஞ்சலி தம்பதி பேசியதாவது:- "மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள ஜபல்பூரில் இருந்து மிதிவண்டி பயணத்தை தொடங்கினோம். இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மிதிவண்டி ஓட்டியபடியே சென்று லடாக்கில் எங்கள் பயணத்தை முடிக்க உள்ளோம். 

தமிழகத்தில் ராமேசுவரம், தனுஷ்கோடி வரை சென்று விட்டு மீண்டும் மதுரைக்கு வந்துள்ளோம். பாளையம் தென்காசி வழியாக கேரளா சென்று அங்கிருந்து மீண்டும் தமிழகம் வழியாக தெலுங்கானா, ஆந்திரா  உள்ளிட்ட பல மாநிலங்களுக்கு செல்ல இருப்பதாக தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

love couples travelling acros in india welcome to madurai


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->