கடுக்காய் சாப்பிட்டால் மிடுக்காய் நடப்பார்கள்... அமைச்சர் தங்கம் தென்னரசு பதிலால் பேரவையில் சிரிப்பலை..!! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டப்பேரவையில் 3ம் நாள் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்ற வருகிறது. இந்த கூட்டத்தில் கேள்வி நேரத்தின் பொழுது திமுக எம்எல்ஏ உதயசூரியன் சட்டப்பேரவையில் பேசியதாவது "ஒரு பழமொழி சொல்வார்கள் காலையில் இஞ்சி.. நன்பகல் சுக்கு.. மாலையில் கடுக்காய் உண்பேல்... காலை வீசி கோலை வீசி குலுங்கி நடப்பேல் என்று சொல்வார்கள். கடுக்காய் சாப்பிடுபவர்கள் மிடுக்காய் நடப்பவர்கள் என்று சொல்வார்கள். எங்கள் கல்வராயன் மலையிலும், சேலம் மாவட்டத்தில் இருக்கும் சின்ன கல்வராயன் மனையிலும் அதிகமாக கடுக்காய் விளைகிறது.

இடைத்தரகர்களால் அந்த பகுதி பழங்குடியின மக்களுக்கு உரிய தொகை கிடைக்காமல் இருக்கிறது. எனவே சாயம் தயாரிப்பதற்கும் மருத்துவ குணமும் கொண்டுள்ள கடுக்காய் தொழிற்சாலையை எங்கள் மாவட்டத்தில் உள்ள சங்கராபுரம் தொகுதி கல்வராயன் மலையில் உருவாக்கித் தருவதற்கு அமைச்சர் முன் வருவாரா என அறிய விரும்புகிறேன்" என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு "உறுப்பினரின் கோரிக்கைக்கு அரசு கடுக்காய் கொடுக்காமல் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்" என பதில் அளித்தார். நகைச்சுவை உணர்வுடன் அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதிலை கேட்டு பேரவையில் இருந்த உறுப்பினர்கள் அனைவரும் சிரித்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Laughter in tnassembly due to Minister answer


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->