மேகதாது அணை குறித்து ஸ்டாலின் பேசாதது ஏன்? - அன்புமணி ராமதாஸ் அறிக்கை.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே சிவகுமார் மேகதாது அணையை கண்டிப்பாக கட்டியே தீர்வோம் என்று கூறியுள்ளார். அது தொடர்பாக  பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டியே தீருவோம். அதன் மூலம் பெங்களூருக்கு காவிரி நீரை வழங்குவோம் என்று கர்நாடக துணை டி.கே.சிவக்குமார் கூறியிருக்கிறார். ஆனால், அதை எதிர்த்து இதுவரை கண்டிக்காத தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைதி காப்பது ஏன்? காங்கிரஸ் கூட்டணிக்காக தமிழ்நாட்டின் காவிரி ஆற்று உரிமையை அடகு வைத்து விட்டாரோ என்ற ஐயத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையாவும், துணை முதல்-அமைச்சர் டி.கே.சிவக்குமாரும் மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று மாறி மாறி கூறி வருகின்றனர். இது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது. தமிழ்நாட்டிற்கும், கர்நாடகத்திற்கும் இடையிலான நல்லுறவை பிளவு படுத்தும் செயலாகும். இதை எந்த தமிழராலும் சகித்துக்கொள்ள முடியாது.

கர்நாடக அரசின் தமிழ்நாட்டின் நலனுக்கு எதிரானவை என்பது தமிழ்நாட்டில் கடைக்கோடியில் இருக்கும் விவசாயிக்குக் கூட தெரியும். ஆனால், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இதுகுறித்து எதுவுமே தெரியாதது தான் வேதனையாக இருக்கிறது. உலகில் நடக்கும் சர்வ சாதாரண சம்பவத்திற்கு எல்லாம் கருத்து தெரிவிக்கும் முதல்வர் ஸ்டாலின்,தமிழ்நாட்டுக்கு காவிரியில் தண்ணீர் வராமல் தடுக்கும் வகையில் மேகதாது அணையை கட்டுவோம் என்று கர்நாடக முதல்-அமைச்சரும், துணை முதல்-அமைச்சரும் தொடர்ந்து கூறி வரும் நிலையில், அதுகுறித்து எதுவுமே கருத்து தெரிவிக்காமல் இருப்பதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.

எப்போதெல்லாம் காங்கிரஸ் மத்தியில் ஆட்சியில் இருக்கிறதோ, எப்போதெல்லாம் திமுக காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணியில் இருக்கிறதோ, அப்போதெல்லாம் தமிழ்நாட்டின் காவிரி உரிமைகளை கர்நாடகத்திற்கு தாரை வார்ப்பது தி.மு.க.வின் வழக்கம். இப்போதும் காங்கிரஸ் கட்சியுடனான உறவுக்காக மேகதாது அணை கட்டும் விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளை தி.மு.க. அரசு அடகு வைத்து விடக்கூடாது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்டப்பட்டால், அதன்பிறகு காவிரி பாசன மாவட்டங்கள் பாலைவனமாகி விடும். அதை உணர்ந்து மேகதாது விவகாரத்தில் தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்க வேண்டும். நல்ல வழியிலோ, மோசடி வழியிலோ மேகதாது அணையை கட்டியே தீருவோம் என்று கூறி வரும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், முதல்-அமைச்சர் சித்தராமையா ஆகியோரை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக கண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kaveri river issue Stalin silent Anbumani Ramdos statement


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->