மொத்தம் 4 அடைப்புகள்.. செந்தில் பாலாஜியின் நிலை என்ன..? காவேரி மருத்துவமனையின் பரபரப்பு அறிக்கை..!! - Seithipunal
Seithipunal


சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்க துறையின் கைது நடவடிக்கையின் போது செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் சென்னை ஓமந்தூரார் அரசு பன்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவரது இதயத்துக்கு செல்லும் ரத்த நாளங்களில் 3 அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனால் அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவக் குழுவினர் பரிந்துரை செய்தனர். இதையடுத்து நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் செந்தில் பாலாஜி சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் இன்று அதிகாலை 5.15 மணிக்கு மருத்துவர் ரகுராமன் தலைமையிலான மருத்துவர் குழு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில், சுமார் 5 மணி நேரத்திற்கு பிறகு நிறைவடைந்தது.

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் காரணமாக அவர் தற்போது மயக்க நிலையில் இருந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை குறித்து பல்வேறு வதந்திகள் பரவிய நிலையில் தற்பொழுது காவேரி மருத்துவமனை அதிகாரப்பூர்வமான அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் "அறுவை சிகிச்சைக்கு பின் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக உள்ளது. புதிய ரத்த நாளம் மூலம் இருதய தமணியில் ஏற்பட்ட அடைப்பு சரி செய்யப்பட்டது. இதயத்திற்கு செல்லும் ரத்த நாளத்தில் இருந்த 4 அடைப்புகள் அகற்றப்பட்டுள்ளன. அறுவை சிகிச்சைக்கு பிறகு தற்போது அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை சீராக இருந்து வருகிறது. தற்போது அவர் சிறப்பு இருதய தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kaveri Hospital issued a report on Senthil Balaji health


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->