கள்ளச்சாராய விவகாரம்.. கரூரை சேர்ந்த முக்கிய குற்றவாளி கைது..!! வெளியான பகீர் தகவல்..!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து கடந்த 12ம் தேதி முதல் இன்று வரை சுமார் 22 பேர் உயிரிழந்த நிலையில் பலர் சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக தற்போது வரை பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தனிப்படை போலீசார் சென்னை மதுரவாயலில் முக்கிய குற்றவாளியான கெமிக்கல் ஃபேக்டரி ஓனரை கைது செய்துள்ளனர். 

ஸ்ரீ விநாயகா எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் உரிமையாளர் இளையநம்பி என்பவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. போலீசார் நடத்திய விசாரணையில் இளையநம்பி கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த கெமிக்கல் இன்ஜினியரிங் படித்த பட்டதாரி என்பது தெரிய வந்துள்ளது. இவர் கடலூர் மாவட்டத்தில் ஏற்கனவே செய்து வந்த தொழில் நஷ்டம் அடைந்ததால் மதுரவாயிலுக்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பு இடம்பெயர்ந்துள்ளார்.

பின்னர் அவர் ஸ்ரீ விநாயகா எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து தமக்குத் தேவையான மெத்தனாலை அவரே தயாரித்து வந்துள்ளார். மெத்தனால் தயாரிப்பதற்கான மூலப் பொருள்களை மணலி மற்றும் கும்மிடிப்பூண்டியில் உள்ள கெமிக்கல் ஆலையிலிருந்து வாங்கி வந்து மெத்தனால் உற்பத்தியில் ஈடுபட்டுள்ளார்.

இவர் ஒரு கெமிக்கல் இன்ஜினியர் என்பதால் மெத்தனாலை தானே உற்பத்தி செய்து விற்பனை செய்து வந்துள்ளார். இந்த தொழிலிலும் நஷ்டம் ஏற்பட்டதால் மெத்தனாலை உற்பத்தி செய்து கள்ளச்சாராயம் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து உள்ளார் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இவர் மெத்தனாலை கள்ளச்சாராய கும்பலுக்கு விற்பனை செய்யும் பொழுது எவ்வளவு சதவீதம் தண்ணீரை கலக்க வேண்டும், எவ்வளவு சதவீதம் மற்ற மூலப் பொருட்களை கலக்க வேண்டும் என்பது குறித்து பாடம் எடுத்த பிறகு கள்ளச்சாராய வியாபாரிகளுக்கு மெத்தனாலை விநியோகம் செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த மே மாதம் 2ம் தேதி விழுப்புரம் சேர்ந்த கள்ளச்சாராய வியாபாரி ஏழுமலை என்பவருக்கு 1200 லிட்டர் மெத்தனாலை விற்று உள்ளார். 

ஆனால் அவை அனைத்தும் கெட்டுப்போன மெத்தனால் என்பதால் தனக்கு தேவையான 600 லிட்டர் மெத்தனாலை மட்டும் வைத்துக்கொண்டு மீதியிருந்த 600 லிட்டர் மெத்தனாலை மீண்டும் இளையநம்பிக்கு திருப்பி அனுப்பியுள்ளார் என்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இது மட்டுமில்லாமல் இளையநம்பி தனக்கு தேவையான மற்ற போதை பொருட்களையும் உற்பத்தி செய்ததாக போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் தனக்கு கீழ் பணிபுரிந்து வந்த மேலும் 4 பேருக்கு மெத்தனாலில் இருந்து எப்படி சாராயம் தயாரிக்க வேண்டும் என பாடம் எடுத்துள்ளார். இந்த நிலையில் தான் நேற்று இரவு இளையநம்பியை போலீசார் கைது செய்துள்ளனர். அவருடன் பணிபுரிந்து வந்த மணிமாறன், உத்தமன் உள்ளிட்ட 4 நபர்களை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூரைச் சேர்ந்த கெமிக்கல் இன்ஜினியர் கள்ளச்சாராயம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Karur chemical engineer arrested in the case of counterfeiting


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->