100 கிலோ தங்கம் எங்கே? உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு.!  - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில் உள்ள ஆயிரம் ஆண்டுகள் பழமையான சோமாஸ்கந்தர் சிலையில் சில சேதங்கள இருந்ததால், புதிதாக தங்க சிலை செய்யப்பட்டது. 

இதற்காக 100 கிலோ தங்கம் வசூலிக்கப்பட்ட நிலையில் சிலையில் ஒரு சதவீதம் கூட தங்கம் இல்லை என்று, அண்ணாமலை என்பவர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 

இந்த புகாரின் அடிப்படையில் சிவகாஞ்சி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ய காஞ்சிபுரம்  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கு தொடர்பாக 9 பேர் மீது கடந்த 2018-ம் ஆண்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் ஆணையர் கவிதா, முத்தையா ஸ்தபதி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம்,  நன்கொடையாளர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்ததை தவிர வேறு எந்த விசாரணையும் மேற்கொள்ளாதது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இந்த வழக்கை சிவகாஞ்சி காவல்துறையினரின் விசாரணைக்கு மாற்றி உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Kanchipuram Ekambaranatha temple new gold statue case


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->