பேனா நினைவு சின்னம்; ஜன.31ல் கருத்து கேட்பு கூட்டம்.. மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு மெரினா கடற்கரையில் நினைவிடம் அமைக்கப்படுகிறது. அதன் அருகே கடலில் 137 அடி உயர பேனா நினைவுச் சின்னத்தை 81 கோடி ரூபாய் செலவில் அமைக்க தமிழக அரசு முடிவு செய்தது. இதற்கு அனுமதி கேட்டு தமிழக அரசு சார்பில் கடலோர ஒழுங்கு முறை ஆணையத்திற்கு பொதுப்பணித்துறை விண்ணப்பித்தது. திட்டம் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது. 

இதற்கிடையே பேனா நினைவு சின்னத்திற்கு தடை விதிக்க கோரி தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நிலையில் தற்பொழுது மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பாக கருத்து கேட்டு கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

பேனா நினைவுச் சின்னம் தொடர்பான வரைவு சுற்றுச்சூழல் அறிக்கை, செயல்திட்ட சுருக்க வரைவு, சூழலியல் ஆபத்து மதிப்பீடு, பேரிடர் மேலாண்மை திட்டம் மற்றும் அவசரகால செயல் திட்டம் குறித்த அறிக்கை பொதுமக்களின் பார்வைக்காக சென்னையில் 15 இடங்களில் வைக்கப்பட்டுள்ளது. 

அதன்படி பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கான கருத்து கேட்பு கூட்டம் வரும் ஜனவரி 31ஆம் தேதி சென்னையில் உள்ள கலைவாணர் அரங்கில் மாவட்ட நீதிபதி அல்லது ஆட்சியர் அல்லது பிரதிநிதிகள் தலைமையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய பிரதிநிதி உதவியுடன் கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jan31 consultation meeting for pen memorial


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->