அதை பகுதி வாரியாக பிரித்து நடத்த வேண்டும்; ஆசிரியர் சங்கம் திடீர் கோரிக்கை!
It should be organized in parts; the teachers association has made an urgent demand
ஆசிரியர் பயிற்சி வகுப்புகளை பகுதி வாரியாக பிரித்து நடத்த வேண்டும் என்று ஆசிரியர் சங்கம் தமிழக அரசுக்கு கோரிக்கைவிடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு தமிழாசிரியர் சங்க மாநில பொது செயலாளர் இளங்கோ கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளதாவது: 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் பாடவாரியாக 100 மதிப்பெண்கள் பெறுவது,, 100 விழுக்காடு அனைவரும் தேர்ச்சி பெற வைப்பது போன்ற அடிப்படையான பயிற்சி வகுப்பை வரவேற்கிறோம்.இப்பயிற்சி வகுப்பில் சிவகங்கையில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்.
சிவகங்கையில் மட்டும் பயிற்சி வகுப்பு நடைபெறுவதால் காரைக்குடி, திருப்பத்தூர், தேவகோட்டை, இளையான்குடி, மானாமதுரை, திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள் சிவகங்கைக்கு வர வேண்டிய நிலை உள்ளது.
இதனால் போக்குவரத்து வசதி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுவதுடன் குறிப்பாக பெண் ஆசிரியர்கள் அதிக சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே பயிற்சி வகுப்புகளை பகுதி வாரியாக பிரித்து சிவகங்கை, காரைக்குடி, திருப்பத்தூர், மானாமதுரை ஆகிய இடங்களில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தமிழாசிரியர் சங்க மாநில பொது செயலாளர் இளங்கோ கல்வித்துறைக்கு அனுப்பியுள்ள கோரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
It should be organized in parts; the teachers association has made an urgent demand