திரு.நாரண துரைக்கண்ணன் அவர்கள் பிறந்ததினம்!. 
                                    
                                    
                                   It is the birthday of Mr Narayana Thuraikannan
 
                                 
                               
                                
                                      
                                            இலக்கிய செம்மல் "நற்கலை நம்பி" திரு.நாரண துரைக்கண்ணன் அவர்கள் பிறந்ததினம்!.
 தமிழகத்தின் தலைசிறந்த பத்திரிகையாளராகவும், இலக்கியத்தின் அனைத்துக் களங்களிலும் தனிமுத்திரை பதித்தவருமான நாரண.துரைக்கண்ணன் 1906ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் தேதி சென்னையிலுள்ள மயிலாப்பூரில் பிறந்தார்.
 இவர் இந்திய விடுதலைப் போராட்டத்தை ஆதரித்து தனது பத்திரிகையில் தலையங்கங்கள், கட்டுரைகளை எழுதினார். ஆங்கிலேய அரசு அவரைக் கண்டித்து எச்சரிக்கை விடுத்தாலும், எங்கள் கொள்கையை விடமாட்டோம், இது எங்களது தேசியக் கடமை எனத் துணிச்சலுடன் அறிவித்தார்.
தமிழ்ச் சிறுகதை மன்னன் எனப் போற்றப்படும் புதுமைப்பித்தனோடு நட்புறவு கொண்டிருந்தார். அவர் இறந்த பிறகு நண்பர்களின் உதவியோடு நிதி திரட்டி, புதுமைப்பித்தனின் மனைவியிடம் ஒரு பகுதியைப் பணமாகவும் மீதித் தொகையைக் கொண்டு சென்னை அண்ணாமலைபுரத்தில் ஒரு வீடும் வாங்கிக் கொடுத்தார்.
 மகாகவி பாரதியின் பாடல்களை நாட்டுடைமை ஆக்க வேண்டுமென்பதற்காகப் பாடுபட்டவர்களில் முதன்மையானவராகத் திகழ்ந்தார். இவர் நற்கலை நம்பி, இலக்கியச் செம்மல் என்னும் பட்டங்கள் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டார். வாழ்க்கைக் கலைஞர் என்று மு.வ.வால் போற்றப்பட்ட நாரண.துரைக்கண்ணன் 1996
ஜூலை 22 ஆம் தேதி அன்று தனது 90-வது வயதில் மறைந்தார்.

 
பம்பாய் மகாணத்தின் முதல் பிரதம மந்திரி திரு.பாலாசாகிப் கங்காதர் கெர் அவர்கள் பிறந்ததினம்!.
பாலாசாகிப் கங்காதர் கெர் [Balasaheb Gangadhar, ஆகஸ்ட் 24, 1888 - மார்ச் 8, 1957] இந்தியாவின் தற்போதைய மகாராஷ்ரா மற்றும் குஜராத்தை உள்ளடக்கிய பம்பாய் மாகாணத்தின் முதல் பிரதம மந்திரியாக (அக்காலத்தில் மாநில முதல்வர்கள் அவ்வாறு அழைக்கப்பட்டனர்) இருந்தவர். 1954ஆம் ஆண்டு இந்திய அரசு அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கியது. வழக்கறிஞராகவும் சமூகசேவகராகவும் அரசியல்வாதியாகவும் விளங்கிய கெர் பழகுவதற்கு இனியவர் என்று பெயர் பெற்றவர்.
                                     
                                 
                   
                       English Summary
                       It is the birthday of Mr Narayana Thuraikannan