தூத்துக்குடியில் இஸ்ரோவின் புதிய ஏவுகணை தளம்! - Seithipunal
Seithipunal


ரூ.18 கோடியில் தூத்துக்குடி திருச்செந்தூர் சாத்தான்குளத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்கான, கட்டுமான பணிகளை துவங்க , இஸ்ரோ டெண்டர் குறித்து தெரிவித்துள்ளது.

இந்தியாவின் செயற்கைகோள்களை மட்டுமின்றி, உலக நாடுகள் பலவற்றின் செயற்கைகோள்களையும் இஸ்ரோ விண்ணில் செலுத்தி வருகிறது, என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து தங்கள் நாட்டு ஏவுகணைகளை விண்ணில் ஏவ , பல நாடுகள் இஸ்ரோவை நாடி வருவதும் கருத்தில் கொள்ள வேண்டியவை.

இவ்வாறு அயல்நாட்டு விமானங்களை விண்ணில் ஏவ, அந்நாடுகள் வைக்கும் கோரிக்கைகளின் அடிப்படையில் ,தேவை அதிகரித்துள்ளதால், ஸ்ரீஹரிகோட்டாவை தாண்டி வேறுசில பகுதிகளிலும் ஏவுதளங்களை ஏற்படுத்த ,இஸ்ரோ முடிவு செய்தது. தற்போது இஸ்ரோ ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஏவுகணைகளை விண்ணில் ஏவி வருகிறது.

ராக்கெட் ஏவுதளம் அமைப்பதற்காக நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்கள் மாவட்டங்களில், சரியான இடத்தை இஸ்ரோ ஆய்வின் அடிப்படையில் தேடும் பணியில் ஈடுபட்டது. ஏவுதளம் அமைப்பதற்கு உகந்த இடமாக தூத்துக்குடி மாவட்டம் ,குலசேகரன்பட்டினம் கடற்கரை பகுதி சரியான இடமாக முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவை தொடர்ந்து குலசேகரன்பட்டினத்தில் புதிய ராக்கெட் ஏவுதளம் ஏற்படுத்துவதான , நிலம் கையகப்படுத்தும் பணி அனைத்தும் நிறைவடைந்தது. தற்போது சுற்றுச்சுவர் அமைக்கும் வேலை நடந்து வருகிறது.

ராக்கெட் ஏவுதள கட்டுமானத்திற்கான வரைபடம் தயாராக உள்ள நிலையில் கட்டுமான வேலைகளை ஆரம்பித்ததும்,  இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவுபெற்று செயல்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், ரூ18 கோடி செலவில் கட்டுமான பணிகள் நடக்க உள்ள தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் தாலுகாக்களில் அமைந்துள்ள SSLV வளாகத்தில் இதற்கான கட்டுமான வேலைகளை ஆரம்பிக்க இஸ்ரோ ஒப்பந்தப்புள்ளி வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ISRO's new launch pad coming soon


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->