வேனுக்கு வெளியே கைகளை நீட்டிய சிறுவனுக்கு கைகள் துண்டான பரிதாபம்.. அதிர்ச்சி வீடியோ காட்சிகள்.. திருப்பூரில் பேரதிர்ச்சி.!! - Seithipunal
Seithipunal


இந்த உலகம் முழுவதும் விபத்துகள் என்பது தொடர்ந்து வருகிறது. தினமும் பல்வேறு விதமான விபத்துகள் அரங்கேறி, பல உயிர்கள் பரிதாபமாக இழக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சில விபத்துகள் பல அலட்சியத்தாலும் நடைபெற்று வருகிறது. 

பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளுக்காக பல்வேறு வசதிகள் செய்யப்பட்டு வந்தாலும், பயணம் செய்யும் நபர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சில முக்கிய விஷயங்கள் இடம்பெறவேண்டியது அவசியமான ஒன்றாகும். 

பள்ளி குழந்தைகள் மற்றும் கல்லூரி மாணவர்கள் சென்று வரும் பேருந்துகளில் தேவையான பாதுகாப்பு அம்சங்கள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அமைப்புகள் இருக்கிறதா? என்பதை சோதனை செய்து கொள்வது அவசியமான ஒன்றாகும்.

வருடத்திற்கு ஒருமுறை சோதனை செய்து பிற விஷயங்களை கவனித்தாலும், ஜன்னல் பகுதியில் விபத்துகள் ஏற்படவில்லை என்றாலும், சில நேரங்களில் சிறு வயதுடைய மாணவர்கள் எதிர்பாராத விதமாக கைகளை பேருந்திற்கு வெளியே வைத்தால் என்ன விபரீதம் அரங்கேறும் என்பது நினைத்துப்பார்க்க இயலாத சோகத்தை ஏற்படுத்தும். 

பள்ளி பேருந்துகள் ஜன்னல் பகுதியில் வலைபோன்ற பாதுகாப்பு அமைப்புகளை அமைத்துக்கொள்வது, அந்தந்த பள்ளி நிர்வாகத்தை பொருத்து அமைத்துக்கொள்கின்றனர். மாணவர்களின் பாதுகாப்பை கருதி அனைத்து பேருந்துகளிலும், ஜன்னல் பகுதியில் வலைபோன்ற பாதுகாப்பு அமைப்பு ஏற்படுத்தியிருந்தால் தற்போதைய சோக விபத்து கட்டாயம் அரங்கேறியிருக்காது. 

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டை அருகேயுள்ள பள்ளியில் பயின்று வந்த மாணவர் தினமும் பள்ளி வேனில் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். இந்த நிலையில், இன்று வழக்கம் போல பள்ளிக்கு சென்ற மாணவர், பள்ளி நிறைவடைந்ததும் வீட்டிற்கு திரும்பிக்கொண்டு இருந்துள்ளார். 

இந்த நேரத்தில், இந்த வேனின் ஜன்னல் பகுதியில் வலைபோன்ற பாதுகாப்பு அமைப்பு இல்லாது இருந்த நிலையில், மாணவர் எதிர்பார்த்த விதமாக வேனுக்கு வெளியே கைகளை நீட்டியுள்ளார். இதனால் மாணவரின் கைகள் எதிரில் வந்த வாகனத்தில் மோதி விபத்திற்குள்ளானதாக தெரியவருகிறது. 

இதனால் மாணவரின் கைகள் துண்டாகியுள்ள நிலையில், சிறுவனை அங்குள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். இது தொடர்பான மேலும் பல விபரங்கள் விரைவில் தெரியவரும். இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும், பள்ளி வேனில் ஜன்னலில் நான்கு வரிசை கம்பிகளை அடுக்கியிருப்பதற்கு பதிலாக, மெஸ்ஷை வைத்து ஜன்னலை அமைத்திருக்கலாம்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

in Tiruppur school bus student hand cutted accident video


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->