தமிழகத்தில் சில இடங்களில் கடல்நீர் உள்வாங்கியதால் பரபரப்பு.. பொதுமக்கள் அச்சம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி மற்றும் திருச்செந்தூரில் கடல் திடீரென உள்வாங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

அம்மாவாசை, பௌர்ணமி, அஷ்டமி மற்றும் நவமி போன்ற நாட்களில் கடல் உள்வாங்குவதும் மாலையில் பழைய நிலைக்கு திரும்புவதும் வழக்கமாக நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கடற்கரையில் இன்று விடுமுறை தினம் என்பதால் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை சற்று அதிகமாக இருந்தது. பக்தர்கள் கடலில் புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

 இந்த நிலையில் அந்தப் பகுதியில் கடலானது திடீரென சுமார் 200 அடி தூரம் உள்வாங்கியது. அதனால் பாறைகள் வெளியே தெரிந்தது. மேலும் கடலில் அலைகள் இல்லாமல் நீர் குளம் போல காட்சியளித்தது.

அதேபோல் தமிழகத்தில் முக்கிய சுற்றுலா தளமான கன்னியாகுமரி கடல் பகுதியிலும் கடல் நீர் உள்வாங்கியது. அதன் காரணமாக விவேகானந்தர் மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படவில்லை.

மேலும், அடுத்த சில மணி நேரங்களில் கடல் இயல்பு நிலைக்கு திரும்பியது. ஆனால், கடல் திடீரென உள்வாங்கியதால் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In some places in Tamil Nadu sea water was absorbed


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->