வரும் ஏப்ரல் 14ல் திமுக சார்பில் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி..!! - Seithipunal
Seithipunal


திமுக சார்பில் ஆண்டு தோறும் இதார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம் அதன்படி இந்த ஆண்டு வரும் ஏப்ரல் 14ஆம் தேதி இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெறுவதாகவும், அந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கலந்து கொள்வதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் "திமுக சார்பில் இதார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை நீலாங்கரையில் உள்ள ஆர்.கே கன்வென்ஷன் சென்டரில் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற உள்ளது.

திமுக தலைமை நிலை செயலாளரும், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டு தலைவருமான துறைமுகம் காஜா தலைமை தாங்குகிறார். திமுக இளைஞரணி செயலாளரும் விளையாட்டு துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். மேலும் இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார்.

இந்த நிகழ்ச்சியில் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம் காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவஹிருல்லா, தமிழ்நாடு தேசிய முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் திருப்பூர் அல்தாப், இந்திய தேசிய லீக் தலைவர் பஷீர் அகமது, வக்பு வாரிய தலைவர் அப்துல் ரகுமான், எஸ்டிபிஐ மாநில தலைவர் நெல்லை முபாரக், தமிழ்நாடு சிறுபான்மை வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு அரசு தலைமை காஜி சலாவுதீன் முகமது ஆயூப், தமிழ்நாடு அரசு தலைமை காஜி குலாம் முகமது மன்சூர் காஷிப், அடையாறு குராஸானி பீர் பள்ளிவாசல் தலைமை இமாம் சதீத்துதீன் பாஜில் பாக்கவி, டாக்டர் ரேலா மருத்துவமனை இயக்குனர் டாக்டர் முகமது ரேலா, அமைச்சர்கள் மா. சுப்ரமணியன், சேகர்பாபு, ஆவடி நாசர், தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன், பெருநகர் சென்னை மாநகராட்சி துணை மேயர் மகேஷ், அயலக தமிழர் நலவாரிய உறுப்பினர் சித்திக் சையது மீரான் உள்ளிட்ட பலர் கலந்து கொள்கிறார்கள்" என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Iftar program on behalf of DMK on April14


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->