மனைவியை கொலை செய்ய முயன்ற கணவன்! அதிரடி தீர்ப்பு வழங்கிய நீதிபதி! - Seithipunal
Seithipunal


கெலமங்கலம் அருகே மனைவியை கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்த கணவன் கைது:

கிருஷ்ணகிரி மாவட்டம்: கெலமங்கலம் அருகே உள்ள இருதாளம் கிராமத்தை சேர்ந்தவர் முனிசந்திரன் (வயதும் 35). இவர் ஒரு கட்டிட தொழிலாளி. இவடைய மனைவி ரேகா. இருவருக்கும் கடந்த 26.7.2021 அன்று குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. 

தகராறின் போது மனைவியை முனிசந்திரன் அடித்துள்ளார். இதனால் ரேகாவின் உறவினர்களான வெங்கடேஷ் (வயது 45), மாதேஷ் (வயது 31) ஆகிய இருவரும் முனிசந்திரனை தடுக்க முயன்ற போது முனிசந்திரன் ஆத்திரமடைந்து இருவரையும் கத்தியால் குத்தி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். 

இதில் படுகாயமடைந்த 2 பேரும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கெலமங்கலம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். 

புகாரின் பேரில் போலீசார் முனிசந்திரனை கைது செய்து, கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த வழக்கு தேன்கனிக்கோட்டை சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. 

வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு வழங்கியதில், கொலை முயற்சி மற்றும் கொலை மிரட்டல் குற்றத்திற்காக முனிசந்திரனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்தார். 

அபராதம் கட்ட தவறினால் மேலும் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உத்தரவிட்டு நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அதை அடுத்து போலீசார் முனிசந்திரனை கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

husband tried to kill wife


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->