வணக்கத்திற்குரிய மேயர் என்று அழைப்பது குறித்து முதலமைச்சர் முடிவெடுப்பார்! அமைச்சர் மா.சுப்ரமணியன் தகவல்.! - Seithipunal
Seithipunal


கடந்த ஆட்சி காலத்தில் மாற்றப்பட்ட வணக்கத்திற்குரிய மேயர் என்று அழைக்கப்பட்டு வந்த நடைமுறையினை மீண்டும் கொண்டு வருவது குறித்து தமிழக முதலமைச்சர் பரிசீலிப்பார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள்  இன்று பெருநகர சென்னை மாநகராட்சி, கோடம்பாக்கம் மண்டலம், வார்டு-136 சிவலிங்கபுரத்தில் 23-வது மெகா கோவிட் தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தார்.  

பின்னர், மாண்புமிகு அமைச்சர் அவர்கள் செய்தியாளர் சந்தித்தார். அப்பொழுது, தமிழ்நாடு முழுவதும் இன்று 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் 23வது மெகா கோவிட் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. சென்னையில் மட்டும் 1,600 இடங்களில் இந்த முகாம் நடைபெற்று வருகிறது.  இதுவரை நடைபெற்ற 22 மெகா தடுப்பூசி முகாம்களில் 3,72,41,003 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தை பொறுத்தவரை நேற்று மாலை வரை 10 கோடியே 30 ஆயிரத்து 346  (10,00,30,346)  கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கோவிட் தடுப்பூசி செலுத்துவதை ஒரு பேரியக்கமாக நடத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தியதின் விளைவாக இந்த 10 கோடி என்ற இலக்கினை அடைய முடிந்தது.

தமிழகத்தில் இதுவரை தடுப்பூசி செலுத்தப்பட்டதில் 18 வயதிற்கு மேற்பட்ட நபர்களில்  91.54 % முதல் தவணை தடுப்பூசியும், 72.62% இரண்டாம்  தவணை தடுப்பூசியும் 15 வயது முதல் 18 வயதிற்குட்பட்டவர்களில் 83.9% முதல் தவணை தடுப்பூசியும், 47.17% இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தப்பட்டுள்ளது.

கோவிட் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி செலுத்துவதில் இதுவரை 6,37,264 நபர்களுக்கு அதாவது 76.57% தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தார்.  

மேலும், தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில் மேயர் பதவிக்கு என பல்வேறு சிறப்பு மிக்க மரபுகள் பின்பற்றப்பட்டு வருகிறது.  அதில் மேயர் அவர்களை வணக்கத்திற்குரிய மேயர் என்று அழைக்கப்பட்டு வந்த மரபினை கடந்த ஆட்சி காலத்தில் மாண்புமிகு மேயர் என மாற்றி அரசானை வெளியிடப்பட்டது.  

தற்சமயம், மேயர் அவர்களை மீண்டும் வணக்கத்திற்குரிய மேயர் என அழைப்பது குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பரிசீலிப்பார் என தெரிவித்தார்.  

தொடர்ந்து, போர் சூழல் நிலவி வரும் உக்ரைன் நாட்டில் படித்து வரும் தமிழ்நாட்டை சார்ந்த மாணவர்களை மீட்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நாடாளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஒரு மீட்புக் குழுவினையும், இந்திய ஆட்சிப்பணி அலுவலர்களைக் கொண்ட குழுவினையும் அமைத்துள்ளார். 

மேலும், மாணவர்களை பாதுகாப்பாக மீட்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள ஒன்றிய அரசின் மாண்புமிகு வெளியுறவுத்துறை அமைச்சர் அவர்களுக்கு கடிதத்தின் வாயிலாக கேட்டுக்கொண்டுள்ளார்.  

உக்ரைன் நாட்டிலிருந்து இதுவரை தமிழ்நாட்டை சேர்ந்த சுமார் 500 மாணவர்கள் பாதுகாப்பாக திரும்பி உள்ளனர்.  

அங்கு தமிழகத்தை சார்ந்த சுமார் 2,200 மாணவர்கள் பயின்று வருவதாக தெரிய வந்துள்ளது. இந்த மாணவர்களின் எதிர்கால கல்வி குறித்து ஒன்றிய அரசு வழங்கும் வழிகாட்டுதல்களை பின்பற்றி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாண்புமிகு அமைச்சர் தெரிவித்தார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் திருமதி.ஆர்.பிரியா, மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையாளர் திரு.ககன்தீப் சிங் பேடி, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Honourable Mayor CM will Decide


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->