மாணவிகளிடம் மசாஜ்! போக்சோ சட்டத்தின் கீழ் கைது! கொந்தளிக்கும் பெற்றோர்கள்! - Seithipunal
Seithipunal


மேட்டூர் அருகே மாணவிகளிடம் மசாஜ், போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சேலம்: மேட்டூர் அருகே கருங்கல்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருப்பவர் ராஜா(வயது 52). 

இந்த பள்ளியில் படிக்கும் ஐந்தாம் வகுப்பு மாணவியரை தனது அறைக்கு அழைத்து சென்று கை, கால்களை அமுக்கி விட வைத்தும் மசாஜ் செய்ய சொல்லியும் பல்வேறு தொல்லைகள் கொடுத்துள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்த பெற்றோர்கள், அரசு பள்ளியை முற்றுகையிட்டு சாலைமறியல் போராட்டம் நடத்தினர். 
 
மேலும் அங்கிருந்த பொதுமக்கள் பள்ளி தலைமை ஆசிரியரை கற்களாலும், செருப்பாலும் தாக்க முயற்சி செய்ததில் சிலர் அவர் மீது செருப்பை வீசினார்கள். 

இதனை அறிந்த போலீசார் சம்பவ இடது விரைந்து வந்து, தலைமை ஆசிரியரை அறையில் வைத்து பாதுகாத்தனர். கூடுதலாக போலீசார் வரவழைக்கப்பட்டு, மேட்டூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு பாதுகாப்புடன் தலைமை ஆசிரியரை அழைத்து சென்றனர். 

பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் மற்றும் ஆசிரியர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பின்னர் தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் இன்று கைது செய்யப்பட்டது. 

இதற்கு முன்னதாகவே, அவரை கல்வித் துறை அதிகாரிகள் பணியிடை  நீக்கம் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Headmaster arrested under the POCSO Act


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->