ஏடிஎம்-ல் பணமெடுக்க சென்ற மூதாட்டிக்கு அதிர்ச்சி.! கைவரிசை காட்டிய மர்ம நபர்.! - Seithipunal
Seithipunal


திண்டிவனத்தில் மூதாட்டி ஒருவரை ஏமாற்றி ₹.19,000 கொள்ளையடித்துச் சென்ற நபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் அருகே நெய்குப்பி பகுதியில் கிருஷ்ணன் என்பவருக்கு சாந்தி என்ற மனைவி இருந்துள்ளார். கணவன் மனைவி இருவரும் நெல் விற்ற பணத்தை எடுப்பதற்காக ஏடிஎம் மையத்திற்கு சென்றுள்ளனர். அப்பொழுது ஏடிஎம் வாசலில் நின்றிருந்த ஒரு இளைஞரிடம் ஏடிஎம் கார்டை கொடுத்து 19 ஆயிரம் பணம் எடுத்து தாருங்கள் என சாந்தி உதவி கேட்டுள்ளார்.

அவரும் உதவி செய்வது போல உள்ளே சென்று பணத்தை எடுத்துக் கொண்டு மூதாட்டியிடம் அந்த ஏடிஎம் செயல்படவில்லை என்று எழுதிப் போடுங்கள் என்று தெரிவித்திருக்கிறார். 
தன்னிடம் இருந்த டம்மி ஏடிஎம் கார்டை மூதாட்டியிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். வங்கிக்கு சென்ற சாந்தி பணம் எடுக்கச் சென்றுள்ளார். 

அப்போது வங்கி நிர்வாகிகள் பணம் ஏற்கனவே எடுக்கப்பட்டு விட்டது என்று கூறியுள்ளனர். இதனால் மூதாட்டி அதிர்ச்சி அடைந்த அழ ஆரம்பித்தார். இதுகுறித்து திண்டிவனம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் ‌. சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து அந்த மர்ம நபரை பிடிக்க காவல்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Grand lady cheated on ATM


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->