பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் உள்ள 2348 காலியிடங்கள் நிரப்புதல் மற்றும் பணியிட மாறுதல்களுக்கான கலந்தாய்வுக்கு நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள அரசுப்பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் பணியிட மாறுதல், பதவி உயர்வு மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காலிப்பணியிடங்கள் மற்றும் உபரி பணியிடங்களின் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் உள்ள அரசு, நகராட்சி பள்ளிகளில் 2,348 பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடங்கள் உள்ளன. இதில் தமிழ் பாடத்தில் 493 இடங்களும், ஆங்கிலத்தில் 254, கணிதத்தில் 485, அறிவியலில் 728 மற்றும் சமூக அறிவியலில் 388 பணியிடங்கள் உள்ளன.

இவற்றில் அதிகபட்சமாகத் திருவண்ணாமலை மாவட்டத்தில் 241 பணியிடங்கள் காலியாக உள்ளது.  மதுரையில் ஒரே ஒரு ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பணியிடம் மட்டும் காலியாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் 5, தர்மபுரி மாவட்டத்தில் 45, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 179 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன.

இந்த நிலையில் நாளை பட்டதாரி ஆசிரியர்கள் காலி பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக ஆசிரியர்கள் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Graduate teachers transfer counseling postponed


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->