ஆவணங்கள் இல்லாமல் அரசு அதிகாரிகள் பத்திரவு பதிவு..மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தம்பதி புகார்!
Government officials recorded property without documents couple complains to District Collectors office
சேலத்தில் முறைகேடாக, ஆவணங்கள் இல்லாமல் அரசு அதிகாரிகள் பத்திரவு பதிவு செய்ததாக, பாதிக்கப்பட்ட நபர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார்..
சேலம் கன்னங்குறிச்சி பகுதியை சேர்ந்த சுகந்தி என்பவர் வசித்து வருகிறார். இவரது கணவர் கணேசன் என்பவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக காணாமல் போகியுள்ளார். இந்த நிலையில் கணவரின் தந்தை தாசக்கவுண்டர் மீது இருந்த சொத்துக்களை வாரிசு சான்றிதழ் மற்றும் தாசக்கவுண்டர் இறப்பு சான்றிதழ் இல்லாமல் ஜலகண்டாபுரம் சார்பதிவாளர் கையூட்டு பெற்றுக்கொண்டு சட்டவிரோதமாக ஆவணபதிவு செய்துள்ளதாக கூறி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட சுகந்தி புகார் மனு அளித்தார்.
முறைகேடான பத்திரப்பதிவில் கணவரின் சகோதரர்கள் நாராயணன், அர்ச்சுணன் ஆகிய இருவரும் செயல்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தார். எனவே முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுத்து பதிவு சட்டம் மற்றும் அதன் விதிமுறைகளுக்கு புறம்பாக ஆவண பதிவு செய்த ஜலகண்டாபுரம் சார்பதிவாளர் முருகேசன் மீது துறை ரீதியான நடவடிக்கை மற்றும் குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்துள்ளனர். மேலும் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலியுறுத்தினர்.
English Summary
Government officials recorded property without documents couple complains to District Collectors office