மகனின் படிப்புக்கு 1.85 கோடி செலவிட்ட தந்தை - லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி. - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள சிங்கப்பெருமாள் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை வேலூரில் நகர ஊரமைப்பு திட்ட குழும உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்தார்.
 

இவருடைய மகன் டிராவிட். இவர் கடந்த 2016 முதல் 2018 ஆம் ஆண்டு வரை ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள வெஸ்டன் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு பயின்றுள்ளார்.

அந்த நேரத்தில் சுப்பிரமணியன் தன் வருமானத்திற்கு மீறி அதிகமாக செலவழிப்பதாக புகார் எழுந்தது.  இந்த புகாரின் படி வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். அந்த விசாரணையில் சுப்பிரமணியன் வருவாய்க்கு அதிகமாக 1.85 கோடி செலவிட்டது உறுதியானது.

இதை அடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சுப்பிரமணியன் மீது வழக்கு பதிவு செய்தனர். இதற்கிடையே சுப்பிரமணியன் 2019 ஆம் ஆண்டு மே மாதம் ஓய்வு பெற இருந்ததால் அவருடைய ஓய்வு அனுமதி மறுக்கப்பட்டது. மகனின் கல்வி செலவுக்காக அரசு ஊழியர் லஞ்சம் வாங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

government officer arrested for bribe for son education


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->