மொத்தமாக சிக்கிய கஞ்சா வியாபாரிகள் - தட்டி தூக்கிய தமிழக போலீஸ்.! - Seithipunal
Seithipunal

காவல்துறையினர் உசிலம்பட்டி பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்ட போது, மதுரையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வத்தலக்குண்டு பகுதிக்கு கொண்டுவரப்பட்ட 3¼ கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

இதனை அடுத்து, காவல்துறையினர் அவர்களிடமிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் 3¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் பின்னர் அவர்களை வத்தலகுண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வத்தலகுண்டு பகுதியில் தொடர்ந்து இது போன்று கஞ்சா விற்பனை நடந்து வருவதால் காவல்துறையினர் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனையை தடுக்க காவல்துறையினர் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் மதுரையில் இருந்து சிலர் மோட்டார் சைக்கிளில் வத்தலக்குண்டு பகுதிக்கு வந்து கஞ்சா விற்பதாக தனிப்படை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. 

இதனை தொடர்ந்து, காவல்துறையினர் உசிலம்பட்டி பிரிவில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது காவல்துறையினர் மதுரையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த நல்லதம்பி மற்றும் தினேஷ்குமார் ஆகியோரை நிறுத்தி சோதனை நடத்தினர். 

சோதனையில் அவர்களிடம் 3¼ கிலோ கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் பின்னர், அதனை வாங்குவதற்காக வந்த வத்தலக்குண்டு பெத்தானியாபுரத்தை சேர்ந்த மவுரிஸ்குமார் மற்றும் சரவணக்குமார் ஆகிய இருவரையும் காவல்துறையினர் சுற்றிவளைத்து பிடித்தனர். 

இதனை அடுத்து, காவல்துறையினர் அவர்களிடமிருந்த மோட்டார் சைக்கிள் மற்றும் 3¼ கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். இதன் பின்னர் அவர்களை வத்தலகுண்டு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வத்தலகுண்டு பகுதியில் தொடர்ந்து இது போன்று கஞ்சா விற்பனை நடந்து வருவதால் காவல்துறையினர் தொடர்ந்து பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இதற்கு முன்னதாக வத்தலக்குண்டு பகுதியை சேர்ந்த அழகுராஜா, பிரேம்குமார் மற்றும் செல்வம் ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்த 7 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இதனை போன்றே, அதே பகுதியில் 7 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடமிருந்து 3 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal

English Summary

ganja sales executives arrested near chennai

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்

Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்

Seithipunal
--> -->