மாணவர்களுக்கு செயலி மூலம் இலவச பஸ் பாஸ்- பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு!! - Seithipunal
Seithipunal


மாணவர்கள் இலவச பஸ் பாஸ் பெறுவதற்கு இனி செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பள்ளி கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் அரசுப் பள்ளிகளில் அந்தந்த வகுப்பு ஆசிரியர் அவரது வகுப்பு மாணவர்கள் இலவச பஸ் பாஸ் பெற பள்ளிக் கல்வித்துறை செயலியில் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ணப்பித்த அனைத்து மாணவர்களின் விவரங்களை சரிபார்த்து தலைமை ஆசிரியர் அனுமதி வழங்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பள்ளிக் கல்வித்துறை செயலியில் நுழைந்து பள்ளி விவரம், மாணவர் பெயர், எந்த வகுப்பு, முகவரி, பஸ் வழித்தட எண், மாணவர் பஸ் ஏறும் பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட விவரங்களை அந்த மணாவர்களின் வகுப்பு ஆசிரியர் பதிவிட்டு விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் அதில் மாணவர்களின் சமீபத்திய புகைப்படங்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். பின்னர் அந்த பள்ளித் தலைமை ஆசிரியர் அவற்றை சரிபார்த்து அனுமதி அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Free Bus Pass for Students through App School Education Department Notification


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->