கல்லூரிகளுக்கு இடையே கால்பந்து போட்டி..முதலிடம் பெற்று சாதனை படைத்த காரைக்குடி கல்லூரி!
Football competition between colleges KaraiKudi College achieved a milestone by securing the first place
கல்லூரிகளுக்கு இடையே கால்பந்து போட்டியில் புதுவயல் வித்யாகிரி கல்லூரி முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளது .
காரைக்குடிகால்பந்து போட்டியில் புதுவயல் வித்யாகிரி கல்லூரி முதலிடம் பெற்று ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது .
டாக்டர் ஜாகிர் உசேன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கடந்த 20,21.8.2025 தேதியில் டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் மற்றும் கல்லூரியும் இணைந்து நடத்திய மாபெரும் கால்பந்து போட்டி நடைபெற்றது ,
இப் போட்டியில் சுமார் 15-க்கும் மேற்பட்ட கல்லூரி அணிகள் பங்கு பெற்றன. இதில் புதுவயல் வித்யா கிரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கால்பந்து அணியினர் கால் இறுதி சுற்றில் VHNS கல்லூரி விருதுநகர் அணியினரை 4-1 என்ற கோல் கணக்கிலும் அரை இறுதி போட்டியில் அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வி கல்லூரி காரைக்குடி அணியினரை
4 -3 கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் டாக்டர் ஜாகிர் உசேன் கல்லூரி இளையான்குடி அணியினரை 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
தொடர்ந்து மூன்று வருடங்களாக வெற்றி வாகை சூடி ஹாட்ரிக் வெற்றி பெற்று கோப்பையை தக்க வைத்து சாதனை படைத்துள்ளனர் கல்லூரி கால்பந்து விளையாட்டு வீரர்களை பாராட்டி கல்லூரி முதல்வர் மற்றும் தாளாளர் டாக்டர் ஆர்.சுவாமிநாதன், தலைவர் கிருஷ்ணன், பொருளாளர் ஹாஜி முகம்மது மீரான் ஆகியோர் மாணவர்களை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.
English Summary
Football competition between colleges KaraiKudi College achieved a milestone by securing the first place