சென்னையில் விமான சேவை பாதிப்பு - காரணம் என்ன? - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களாகவே தமிழகம் முழுவதும் சென்னை புறநகர் பகுதியான ஆலந்தூர், ஆதம்பாக்கம், மீனம்பாக்கம், பரங்கிமலை உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். 

இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்தில் பலத்த மழை காரணமாக பயணிகளும், வழியனுப்ப வந்தவர்களும் பாதிக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாமல். விமான சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது.

அதாவது இந்தத் தொடர் கனமழையால் சென்னையில் இருந்து டெல்லி, கொச்சி, புனே, மும்பை, ஆமதாபாத், ஐதராபாத், பெங்களூரூ, திருவனந்தபுரம், கோவா, திருச்சி உள்ளிட்ட நகரங்களுக்கு புறப்பட வேண்டிய 30-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

அதேபோல் சென்னை விமான நிலையத்திற்கு வரவேண்டிய திருச்சி, சூரத், சீரடி, மதுரை, லக்னோ உள்பட 10-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக வந்து சேர்ந்தன. பலத்த மழை பெய்து கொண்டே இருந்ததால் விமான சேவைகள் சற்று பாதிக்கப்பட்டதாக விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

flight sevice affected for rain in chennai airport


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->