கொள்முதல் விலையை உயர்த்தக் கோரி தென்னை விவசாயிகள் நூதன போராட்டம்.! - Seithipunal
Seithipunal


கோயம்புத்தூர், சூலூர் அருகே உள்ள சுல்தான்பேட்டையில் தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் தேங்காய் விலை குறைவை கண்டித்து விவசாயிகள் மாட்டு வண்டியுடன் வந்து தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது. 

இந்த போராட்டத்திற்கு தமிழக கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாநில தலைவர் தலைமை ஏற்றார். மாட்டு வண்டிகளுடன் போராட்டத்தில் விவசாயிகள் ஊர்வலமாக சுல்தான்பேட்டையில் இருந்து 5 கிலோமீட்டர் தூரம் வரை மாட்டு வண்டிகளில் கோஷமிட்டபடி தேங்காய் உடைத்து போராட்டங்களை நடத்தினர். 

தமிழக முழுவதும் மிகவும் குறைவான விலைக்கு தேங்காய் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து அதனை பொதுமக்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. 

கேரளா, கர்நாடகா, பீகார், ஆந்திரா போன்று, தமிழக அரசும் கள்ளுக்கான தடை நீக்க வேண்டும். மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய டாஸ்மாக் மது கடைகளை மூட வேண்டும். 

அனைத்து ரேஷன் கடைகளிலும் பாமாயில் இறக்குமதியை  தடை செய்து தேங்காய் எண்ணெய் விநியோகிக்க வேண்டும். இதற்கு மத்திய அரசும், மாநில அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர். 

100 க்கும் மேற்பட்ட விவசாயிகள் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இதனை அடுத்து போராட்டம் நடந்த பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

கோவை, திருப்பூர் மாவட்டங்களில் கடந்த 30 நாட்களாக தினமும் தேங்காய் உடைக்கும் போராட்டம் ஒவ்வொரு பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

farmer Coconut cracking protest


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->