பிரபல நகைக்கடையில் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை! - Seithipunal
Seithipunal


ஈரோடு, சத்தியமங்கலம் நகர பகுதியில் பிரபு காந்த் (வயது 45) என்பவர் வாசவி என்ற பெயரில் தங்கம், வெள்ளி நகை கடை வைத்துள்ளார். மேலும் இவர் நண்பர்களுடன் சேர்ந்து ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். 

கோயம்புத்தூரில் இருந்து நேற்று மதியம் 3 கார்களில் வந்த வருமானவரி துறையினர் திடீரென இவரது நகை கடைக்குள் நுழைந்து ஷட்டரை மூடி சோதனையில் ஈடுபட்டனர். 

இதேபோல் வெள்ளி கடை மற்றும் உரிமையாளர் வீடு அவரது நண்பர்கள் வீடு போன்ற இடத்திலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

இந்த சோதனையில் சுமார் 20க்கும் மேற்பட்ட அதிகாரிகள் ஈடுபட்டனர். சோதனையின் போது கடையின் போன் இணைப்பு துண்டிக்கப்பட்டு கடையில் இருந்தவர்கள் அனைவரையும் வெளியே செல்ல அனுமதிக்காமல் ஒவ்வொரு பகுதியாக சென்று சோதனை செய்த்தனர்.

இந்த சோதனை மதியம் 2 மணிக்கு தொடங்கி இரவு 12 மணி வரை நடந்தது. பின்னர் வருமான வரி துறையினர் வரியைப்பு அடிப்படையில் சோதனை நடத்தியதாக தெரிவித்து விட்டு சென்றனர். 

இருப்பினும் இந்த சோதனை குறித்து வருமான வரி துறையினர் முழுமையாக எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. முக்கிய ஆவணங்கள் எதுவும் கைப்பற்றப்பட்டது என்பது குறித்து தகவல் வெளியாகவில்லை. 

திடீரென வருமானவரித்துறையினர் சோதனை நடத்திய சம்பவம் சத்தியமங்கலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

famous jewelry shop IT raid


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->