முன்னாள் அமைச்சரின் உதவியாளராக இருந்தவர் கைது.. வெளியான பரபரப்பு தகவல்..!! - Seithipunal
Seithipunal


சென்னை தலைமைச் செயலகத்தில் பணியாற்றி வரும் ரவி என்பவர் ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த முத்து லட்சுமி என்பவரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.11 லட்சத்தை பெற்றுள்ளார். அதன் பிறகு அவர் அரசு வேலை வாங்கித் தராமல் காலம் தாழ்த்தி வந்ததால் தன்னுடைய பணத்தை திருப்பி கேட்டு உள்ளார். இந்த நிலையில் முத்துலட்சுமிக்கு தர வேண்டிய பணத்தை கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்ததாக சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அதன் அடிப்படையில் தலைமைச் செயலக அலுவலர் ரவி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலக ஊழியர் ரவியை மத்திய குற்றப் பிரிவு போலீசார் கைது சிறையில் அடைத்தனர். மேலும், தரகராக செயல்பட்ட விஜய் என்பவரையும் கைது செய்துள்ளனர். இதேபோல், பணியிட மாற்றம் பெற்றுத் தருவதாகவும், மருத்துவக் கல்லூரி சீட் வாங்கித் தருவதாகவும் பலரிடமும் ரவி மோசடியில் ஈடுபட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் கைது செய்யப்பட்டுள்ள தலைமைச் செயலக அலுவலர் ரவி முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு உதவியாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பண மோசடி புகாரில் கைது செய்யப்பட்டுள்ள இருவரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Exminister assistant arrested money laundering case


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->